News May 4, 2024
சாமானிய மக்களின் பிரச்னை மோடிக்கு புரியாது

மோடியால் சாமானிய மக்களின் பிரச்னைகளை புரிந்து கொள்ள முடியாது என பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். குஜராத் மாநிலம் பனஸ்கந்தாவில் பிரசாரம் செய்த அவர், மக்கள் பிரச்னைகளை கேட்க காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ராகுல் 4,000 கி.மீ. பயணம் செய்ததாகத் தெரிவித்தார். ஆனால், உடலில் சிறு தூசி கூட படாமல் மாளிகையில் வசிக்கும் மோடி, மக்கள் பிரச்னையை எப்படி புரிந்துக் கொள்வார் என்று கேள்வி எழுப்பினார்.
Similar News
News September 22, 2025
பாலஸ்தீனம் நாடு ஒருபோதும் உருவாகாது: நெதன்யாகு

பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிப்பதாக இங்கி., ஆஸி., கனடா உள்ளிட்ட நாடுகள் அறிவித்தன. இந்நிலையில், பாலஸ்தீன நாடு ஒருபோதும் உருவாகாது என்று இஸ்ரேல் PM பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் தலைவர்கள் பயங்கரவாதத்தை பரிசளிக்கிறார்கள் என காட்டமாக கூறிய அவர், பல ஆண்டுகளாக வந்த அழுத்தங்களை எதிர்த்து பாலஸ்தீன நாடு உருவாகாமல் தடுத்ததாகவும் தெரிவித்தார்.
News September 22, 2025
சற்றுமுன்: ஒரே நாளில் விலை ₹3000 உயர்வு

ஆபரணத் தங்கத்தை தொடர்ந்து, வெள்ளி விலையும் வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 1 கிராம் வெள்ளி விலை, இன்று ஒரே நாளில் ₹3 அதிகரித்து ₹148-க்கும், கிலோ வெள்ளி ₹3000 அதிகரித்து ₹1,48,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த அளவுக்கு விலை உயர்ந்தது இதுவே முதல்முறை. கடந்த 4 நாள்களில் மட்டும் சுமார் ₹7000 அதிகரித்துள்ளது. வரும் நாள்களிலும் விலை அதிகமாகவே இருக்கும் என கூறப்படுகிறது
News September 22, 2025
பங்குச் சந்தையில் எதிரொலிக்காத GST குறைப்பு

GST குறைப்பால் பங்குச் சந்தைகள் ஏற்றம் காணும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு நேர்மாறாக பங்குச் சந்தைகள் சரிவுடன் வர்த்தமாகி வருகின்றன. காலையில் 400 புள்ளிகள் சரிவுடன் தொடங்கிய சென்செக்ஸ் தற்போது 100 புள்ளிகளும், நிப்ஃடி 10 புள்ளிகளும் சரிந்துள்ளன. இன்போசிஸ், டிசிஎஸ், டெக் மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சி கண்டுள்ளன. அதே நேரத்தில், அதானி கிரீன் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.