News January 9, 2026
மயிலாடுதுறை: இனி வாட்ஸ்ஆப் மூலம் வரி செலுத்தலாம்!

தமிழக அரசு, மெட்டா நிறுவனத்துடன் இணைந்து Whatsapp மூலமாக பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பெறுதல், வரி மற்றும் மின் கட்டணம் செலுத்துதல் என 50-க்கும் மேற்பட்ட சேவைகள் பெரும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அத்தனை அரசு சேவைகளையும் அலைச்சல் இல்லாமல் நீங்கள் வீட்டில் இருந்தே பெறலாம்! ஷேர் பண்ணுங்க.
Similar News
News February 7, 2026
மயிலாடுதுறை: இனி WhatsApp-இல் பட்டா, சிட்டா…

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1. இதற்கு, 81888 69996 என்ற எண்ணை SAVE பண்ணுங்க
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்ந்தெடுங்க
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp-ல் கிடைக்கும்
5. இந்த தகவலை SHARE பண்ணுங்க.!
News February 7, 2026
மயிலாடுதுறை மக்களுக்கு எச்சரிக்கை

மயிலாடுதுறை மக்கள், சமூக ஊடகங்களில் தங்களது முகவரி, தொலைபேசி எண் போன்ற தனிப்பட்ட விவரங்களை பதிவிடுவதை தவிர்க்க வேண்டும். அதனை சைபர் குற்றவாளிகள் பயன்படுத்தி, உங்களது விவரங்களை திருட இயலும். எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் சைபர் குற்றங்கள் குறித்து ‘1930’ என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 7, 2026
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உள்ளகக் குழு (பெண்கள் பாதுகாப்புக்கான அலுவலக குழு) அமைக்க வேண்டும். தவறும் நிறுவனங்களுக்கு பணியிடத்தில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் சட்டம் 2013ன் படி ரூ. 50,000 அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கூடுதல் விவரங்களுக்கு 04364212429 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்


