News May 4, 2024
யாஷ் உடன் இணைந்து நடிக்கும் நயன்தாரா?

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் ‘டாக்சிக்’ திரைப்படம் தயாராகி வருகிறது. ‘கேஜிஎஃப்’ படத்தைபோல, இப்படமும் மிகப்பெரிய வசூலைக் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் யாஷின் சகோதரியாக கரீனா கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால், அவர் தற்போது கால்ஷீட் பிரச்னையால் படத்தில் இருந்து விலகியதாகவும், அவருக்கு பதில் நயன்தாரா நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News September 22, 2025
பாலஸ்தீனம் நாடு ஒருபோதும் உருவாகாது: நெதன்யாகு

பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிப்பதாக இங்கி., ஆஸி., கனடா உள்ளிட்ட நாடுகள் அறிவித்தன. இந்நிலையில், பாலஸ்தீன நாடு ஒருபோதும் உருவாகாது என்று இஸ்ரேல் PM பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் தலைவர்கள் பயங்கரவாதத்தை பரிசளிக்கிறார்கள் என காட்டமாக கூறிய அவர், பல ஆண்டுகளாக வந்த அழுத்தங்களை எதிர்த்து பாலஸ்தீன நாடு உருவாகாமல் தடுத்ததாகவும் தெரிவித்தார்.
News September 22, 2025
சற்றுமுன்: ஒரே நாளில் விலை ₹3000 உயர்வு

ஆபரணத் தங்கத்தை தொடர்ந்து, வெள்ளி விலையும் வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 1 கிராம் வெள்ளி விலை, இன்று ஒரே நாளில் ₹3 அதிகரித்து ₹148-க்கும், கிலோ வெள்ளி ₹3000 அதிகரித்து ₹1,48,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த அளவுக்கு விலை உயர்ந்தது இதுவே முதல்முறை. கடந்த 4 நாள்களில் மட்டும் சுமார் ₹7000 அதிகரித்துள்ளது. வரும் நாள்களிலும் விலை அதிகமாகவே இருக்கும் என கூறப்படுகிறது
News September 22, 2025
பங்குச் சந்தையில் எதிரொலிக்காத GST குறைப்பு

GST குறைப்பால் பங்குச் சந்தைகள் ஏற்றம் காணும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு நேர்மாறாக பங்குச் சந்தைகள் சரிவுடன் வர்த்தமாகி வருகின்றன. காலையில் 400 புள்ளிகள் சரிவுடன் தொடங்கிய சென்செக்ஸ் தற்போது 100 புள்ளிகளும், நிப்ஃடி 10 புள்ளிகளும் சரிந்துள்ளன. இன்போசிஸ், டிசிஎஸ், டெக் மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சி கண்டுள்ளன. அதே நேரத்தில், அதானி கிரீன் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.