News January 9, 2026

காஞ்சிபுரத்தில் திடீர் மாற்றம்!

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரும் 10.01.2026 அன்று காலை 10.00 மணிக்கு, காஞ்சிபுரம் வட்டத்தில் குண்டுகுளம், உத்திரமேரூர் வட்டத்தில் கடல்மங்கலம், வாலாஜாபாத் வட்டத்தில் ஆற்ப்பாக்கம், திருப்பெரும்புதூர் வட்டத்தில் சந்தவேலூர், குன்றத்தூர் வட்டத்தில் வழுதலம்பேடு ஆகிய கிராமங்களில் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம்கள் நடைபெறுவதாக இருந்தது. நிர்வாக காரணங்களால் 24.01.2026 அன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Similar News

News January 25, 2026

காஞ்சிக்கு வருகை தரும் தமிழக முதல்வர்!

image

மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாளை முன்னிட்டு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜன.25) காஞ்சிபுரம் வருகை தருகிறார். காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அவர் உரையாற்றுகிறார். இந்நிகழ்வை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முன்னதாக, சென்னையில் உள்ள மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்திலும் மரியாதை செலுத்தப்பட்டது.

News January 25, 2026

காஞ்சி: மின் வாரியத்தின் ‘நூதன’ கண்டு பிடிப்பால் அதிர்ச்சி!

image

காஞ்சிபுரம் மாவட்டம், ஒரத்தூர் அகஸ்தீஸ்வரர் கோயில் அருகே சேதமடைந்த மின் கம்பத்தை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் விடுத்த கோரிக்கைக்கு, மின் வாரியம் நூதன முறையில் பதிலளித்துள்ளது. கம்பி துருப்பிடித்த இடத்தில் ரப்பர் காலணியை நுழைத்து தற்காலிகமாகச் சரிசெய்துள்ளனர். போக்குவரத்து மிகுந்த இச்சாலையில் இத்தகைய ஆபத்தான மற்றும் அலட்சியமான செயலால் பொதுமக்கள் அதிர்ச்சியும் வியப்பும் அடைந்துள்ளனர்.

News January 25, 2026

காஞ்சிபுரம்: பணிக்குச் சென்ற இடத்தில் பறிபோன உயிர்!

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில், போளிவாக்கத்தைச் சேர்ந்த பிரிந்தா (29) என்ற தனியார் தொழிற்சாலை பெண் ஊழியர், நேற்று காலை பணிக்குச் சென்றபோது சாலை விபத்தில் உயிரிழந்தார். ஸ்ரீபெரம்பத்தூர் – சிங்கப்பெருமாள் கோவில் சாலையைக் கடக்க முயன்றபோது, அதிவேகமாக வந்த சரக்கு வாகனம் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!