News January 9, 2026

திருவள்ளூரில் ரூ.2.12 கோடி விபூதி!

image

திருவள்ளூர் பகுதியில், குறைந்த வட்டியில் லோன் வாங்கி தருவதாக கூறி 15 பேரிடம் ரூ.2.12 கோடி வரை மோசடி செய்யப்பட்டதாக, ஆவடி காவல் ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு-க்கு (CCB) ஒரு புகார் வந்தது. அந்த புகாரின் அடிப்படையில், தலைமறைவாக இருந்து வந்த சாரா ஜோஸ்பின் பியூலா, கார்த்திகேயன், தினகரன், சித்ரா ஆகிய 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Similar News

News February 3, 2026

திருவள்ளூரில் துடித்துடித்து பலி!

image

ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெடியங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதி(38). இவரது கணவர் தனபால்(53). இவர்களது வீட்டின் கீழ் தளத்தில் விசைத் தறிகள் வைத்து தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று(பிப்.2) விசைத்தறிகளை இயக்க சென்ற ஜோதி, மின்சாரம் தாக்கி மயங்கினார். அவரது கணவர் உடனே அவரை சிகிச்சைக்கு அழைத்துச் சென்றார். அதில், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

News February 3, 2026

திருத்தணி: சிறுமிக்கு காதல் தொல்லை!

image

திருவள்ளூர்: திருத்தணி சந்து தெருவைச் சேர்ந்தவர் ஹரிஷ்(23). இவர் 17 வயது சிறுமியை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், ஹரிஷிடம் பேசுவதைத் தவிர்த்து வந்தார் அச் சிறிமி. இதனால் ஆத்திரமடைந்த ஹரிஷ், ‘நாம் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை சமூக வளைதளங்களில் வெளியிடுவேன்’ என மிரட்டியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் புகாரில் ஹரிஷை போலீசார் கைது செய்தனர்.

News February 3, 2026

திருவள்ளூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று (பிப்ரவரி 2) இரவு முதல் இன்று (பிப்ரவரி 3) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!