News January 9, 2026
விழுப்புரம்: விஜய்க்கு பேனர்-தவெக நிர்வாகிக்கு வழக்கு!

விழுப்புரம்: நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய்யின் ஜன நாயகன் படம் வெளியாகவுள்ள நிலையில், விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் தவெக-வினர் அனுமதியின்றி பேனர் வைத்துள்ளனர். இந்நிலையில், பேனர் வைத்த தவெக பிரமுகர் ஹரி கிருஷ்ணன் மீது நேற்று போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News January 30, 2026
விழுப்புரம் அருகே பேருந்து விபத்து!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து விழுப்புரம் நோக்கி 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பேருந்து புறப்பட்டுச் சென்றது. மேம்பாலத்தில் சென்றபோது பிரேக் செயல்படாமல் பேருந்து வேகமாக முன்னேறியது. உடனடியாக சாமர்த்தியமாக செயல்பட்ட ஓட்டுநர், பேருந்தை சாலையோர தடுப்பில் மோதி நிற்கச் செய்தார். இதனால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. பேருந்தில் உள்ள அனைத்து பயணிகளும் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
News January 30, 2026
விழுப்புரம்: இருவேறு விபத்துகளில் இருவர் பலி!

மரக்காணம் அருகே பிரம்மதேசத்தில் சாலையோரம் நடந்து சென்ற சரஸ்வதி (80) என்ற மூதாட்டி மீது அடையாளம் தெரியாத பைக் மோதிவிட்டுத் தப்பியது; இதில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொரு விபத்தில், திண்டிவனத்திலிருந்து வீடு திரும்பிய விக்னேஷ் (30) என்பவரது பைக் கட்டுப்பாட்டை இழந்து பனைமரத்தில் மோதியதில் அவர் உயிரிழந்தார். இந்த இரு விபத்துகள் குறித்து பிரம்மதேசம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News January 30, 2026
விழுப்புரத்தில் விளையாட்டு திருவிழா துவக்கம்

விளையாட்டு திருவிழா போட்டிகள் விழுப்புரத்தில் விளையாட்டு திருவிழா முன்னிட்டு நாளை 31ம் தேதி ஆண்களுக்கான வாலிபால், கபடி, கிரிக்கெட் மற்றும் ஆண்கள், பெண்களுக்கு கயிறு இழுத்தல், கேரம் போட்டிகள் நடக்கிறது. 1ம் தேதி பெண்களுக்கு வாலிபால், கபடி, எறிபந்து மற்றும் ஆண்கள், பெண்களுக்கு தடகளம் மற்றும் மாவட்ட அளவில் ஆண்கள், பெண் களுக்கு ஓவியம், கோலப் போட்டிகள் தொடங்கும் என ஆட்சியர் அறிவிக்கப்பட்டுள்ளது.


