News May 4, 2024

ரோகித் இம்பாக்ட் பிளேயராக இறங்கியது ஏன்?

image

KKRக்கு எதிரான நேற்றைய போட்டியில் ரோஹித் ஷர்மா இம்பாக்ட் பிளேயராக களமிறக்கப்பட்டார். 5 முறை கோப்பையை பெற்றுத் தந்த ரோஹித்தை இம்பாக்ட் பிளேயராக எப்படி ஆட வைக்கலாம் என ரசிகர்கள் கொதித்தெழுந்தனர். இதுகுறித்து MI அணி வீரர் பியூஷ் சாவ்லா, KKRக்கு எதிரான போட்டிக்கு முன்பாக ரோஹித்துக்கு முதுகு பிடிப்பு இருந்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் இம்பாக்ட் பிளேயராக ஆட வைக்கப்பட்டதாக விளக்கமளித்தார்.

Similar News

News September 22, 2025

திங்கள்கிழமையை நினைத்து Stress ஆகாமல் இருக்க..

image

➤ஞாயிற்றுக்கிழமை இரவு சீக்கிரம் தூங்க செல்லுங்கள் ➤ஞாயிறு அன்று மது அருந்த வேண்டாம் ➤காலையில் சீக்கிரம் எழுந்திருங்கள். அமைதியாக உங்கள் நாளை தொடங்க தியானம்/உடற்பயிற்சி செய்யலாம் ➤அன்றைய நாளுக்கான விஷயங்களை திட்டமிடுங்கள் ➤வேலை நேரத்துக்கு நடுவே போதுமான இடைவேளை எடுங்கள். இப்படி செய்வதால் திங்கள்கிழமைகளில் ஏற்படும் <<17789876>>Stress-ஆல் வரும் மாரடைப்பு <<>>அபாயத்திலிருந்து நீங்கள் தப்பலாம். SHARE.

News September 22, 2025

திங்கள்கிழமையில் மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகமா?

image

திங்கள்கிழமைகளில் மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. லீவ் முடிந்து திங்கள்கிழமை வேலைக்கு போகும்போது நமக்கு மன அழுத்தம் அதிகமாக இருக்குமாம். இது மாரடைப்புக்கான முக்கிய காரணமாக உள்ளது. மேலும், வார இறுதியில் அதிகமாக மது அருந்துவதால் HighBP ஏற்பட்டு இதய செயலிழப்புக்கு வழிவகுக்குமாம். இதிலிருந்து தப்பிப்பது எப்படி என தெரிந்துகொள்ள <<17790792>>க்ளிக் பண்ணுங்க<<>>. SHARE.

News September 22, 2025

கிஸ் vs சக்தித் திருமகன்: பாக்ஸ் ஆபிசில் முந்தியது யார்?

image

செப்டம்பர் 19-ம் தேதி பல படங்கள் வெளியான போதிலும், ‘கிஸ்’ & ‘சக்தித் திருமகன்’ ஆகிய படங்கள் மட்டுமே ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளன. 3 நாள் முடிவில், ‘கிஸ்’ படம் ₹1.76 கோடி மட்டுமே வசூலித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதே நேரத்தில், ‘சக்தித் திருமகன்’ ₹3.79 கோடியை வசூலித்துள்ளதாம். இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், மேலும் வசூல் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!