News January 9, 2026
கள்ளக்குறிச்சி: மனைவி மறுத்ததால் கணவன் தற்கொலை!

கள்ளக்குறிச்சி: புதுப்பேட்டையைச் சேர்ந்தவர் நவீன்குமார் (27). இவருடைய மனைவி ரோஷினி (20). இவர்களுக்கு ரெக்சன் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், ரோஷினி, நவீனுடனான கருத்து வேறுபாட்டால் தனது தாய் வீட்டில் இருந்துள்ளார். தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு நவீன் சென்று அழைத்தபோது ரோஷினி மறுத்ததால், மனமுடைந்த அவர் விஷத்தை குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News January 29, 2026
கள்ளக்குறிச்சி: ஒரே கிளிக்… 40 லட்சம் அபேஸ்!

மஞ்சப்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த யாதவராஜ், குவைத்தில் எலக்ட்ரீஷியனாகப் பணிபுரிந்து மாதம் 1 லட்சம் ஈட்டி வந்தார். சமூக வலைதளத்தில் வந்த லிங்க் மூலம் ‘டேட்டிங் ஆப்’ ஒன்றில் நுழைந்த இவரிடம், பல்வேறு காரணங்களைக் கூறி மர்ம நபர்கள் ரூ.40,70,470 பறித்துள்ளனர். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த யாதவராஜ், இதுகுறித்து நேற்று சைபர் கிரைம் போலீசில் புகாரளித்தார்.
News January 29, 2026
கள்ளக்குறிச்சி: சான்றிதழ்கள் பெறுவது இனி ரொம்ப ஈஸி..

கள்ளக்குறிச்சி மக்களே, உங்களுக்கு தேவையான
1.சாதி சான்றிதழ்
2.வருமான சான்றிதழ்
3.முதல் பட்டதாரி சான்றிதழ்
4.கைவிடப்பட்ட பெண் சான்றிதழ்
5.விவசாய வருமான சான்றிதழ்
6.சாதி கலப்பு திருமணச் சான்றிதழ்
7.குடியிருப்புச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களை பெற இந்த <
News January 29, 2026
உளுந்தூர்பேட்டையில் பரபரப்பு!

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சேந்தமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர சைடு கட்டை ஓரமாகப் பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளானது. இதில் கார் பலத்த சேதமடைந்த போதிலும், ஓட்டுநர் எவ்வித காயமுமின்றி நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். சம்பவ இடத்திலிருந்த பொதுமக்கள் காரை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.


