News January 9, 2026
பனங்கிழங்கில் இவ்வளவு மருத்துவ குணங்களா?

பொங்கலையொட்டி தமிழகத்தில் பனங்கிழங்கு விற்பனையும் சூடுபிடிக்கும். அத்தகைய பனங்கிழங்கில் பல மருத்துவ குணங்களும் உள்ளன. இவை குளிர்ச்சி தன்மை உடையது. மலச்சிக்கலை தீர்க்கக்கூடியது. இதிலுள்ள இரும்புச்சத்து உடலுக்கு வலு சேர்க்கும். நார்ச்சத்து அதிகம் இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பனங்கிழங்கு வாயுத்தொல்லை உடையது. எனவே அதனுடன் பூண்டு, மிளகு, உப்பு சேர்த்து இடித்து மாவாக்கி சாப்பிடலாம்.
Similar News
News February 11, 2026
சீட் இல்லையென்றால் கவலை வேண்டாம்: விஜய்

மாற்றுக்கட்சியை சேர்ந்த தலைவர்கள் தவெகவில் இணைந்ததால் தவெக முக்கிய நிர்வாகிகளுக்கு கூட சீட் கிடைக்காத சூழல் இருப்பதாக பேச்சு எழுந்தது. இந்நிலையில், இன்று நடந்த மா.செ.க்கள் கூட்டத்தில் ‘வேட்பாளர் பட்டியலில் பெயர் இல்லை என்றால் வருத்தப்படக்கூடாது’ என விஜய் கூறியுள்ளார். வேட்பாளர்களுக்கு தவெக நிர்வாகிகள் ஒத்துழைப்பு அளிக்கவும், ஒரு தொகுதிக்கு 5 தேர்தல் பணிமனைகளை அமைக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.
News February 11, 2026
விவாகரத்தால் சந்தோஷம் அடைகிறேன்: பார்த்திபன்

நடிகை சீதாவுடனான விவகாரத்து குறித்து நடிகர் பார்த்திபன் மனம் திறந்து பேசியுள்ளார். சீதாவுடன் வாழ்ந்த 12 ஆண்டுகள் மிகவும் இனிமையானவை எனக்கூறிய பார்த்திபன், சீதாவை பிரிந்ததை எண்ணி வருந்தியதே இல்லை; சொல்லப்போனால் ரொம்ப சந்தோஷப்படுகிறேன் எனத் தெரிவித்துள்ளார். எந்த பெண்ணும் திருமணம் என்ற பெயரில் கட்டுப்பாடான வாழ்க்கையை வாழ விரும்பவில்லை என்றும் சுதந்திரமாக வாழவே விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
News February 11, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (பிப்.11) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.


