News January 9, 2026
SPORTS 360°: காலிறுதிக்கு முன்னேறிய பி.வி.சிந்து

*விஜய் ஹசாரேவில் தொடர்ச்சியாக 4 போட்டிகளில் தோல்வியை தழுவிய தமிழ்நாடு அணி, நேற்று கேரளாவை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது. *இலங்கை டி20 அணிக்கு இந்திய முன்னாள் வீரர் விக்ரம் ரத்தோர் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். *மலேசிய ஓபன் பேட்மிண்டனில் பிவி சிந்து காலிறுதிக்கு முன்னேறினார். *72-வது சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு அணி காலிறுதிக்கு முன்னேறியது.
Similar News
News February 19, 2026
சாப்பிட்ட பின் 10 நிமிடம்.. என்னென்ன நன்மைகள்?

சாப்பிட்ட பிறகு 10 நிமிடங்கள் நடப்பது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது என்று டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்த சிறிய பழக்கம், உடலில் என்னென்ன நன்மைகள் ஏற்படும் தெரியுமா? *ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க செய்யாமல் கட்டுக்குள் வைத்திருக்கும். *செரிமானத்தை ஊக்குவிக்கும் *வாயு பிரச்னைகளைக் குறைக்கிறது. நீங்கள் வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ எங்கு வேண்டுமானாலும் 10 நிமிடம் நடக்கலாம்.
News February 19, 2026
AI புதிய மதங்களை உருவாக்கும்: ஹராரி

Zerodha நிகில் காமத்துடனான கலந்துரையாடலில், புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் யுவல் நோவா ஹராரி மதம் குறித்து சுவாரஸ்யமான கருத்துக்களை பகிர்ந்துள்ளார். உலகில் இருக்கும் மதங்களின் புனித நூல்களை தற்போது பலராலும் படிக்கவோ, மனப்பாடம் செய்யவோ முடியாது. ஆனால் AI அவை அனைத்தையும் படித்து, அதனை மனிதர்களுக்கு விளக்கவும் செய்யும். அதனடிப்படையில் எதிர்காலத்தில், அது புது மதத்தைக் கூட உருவாக்கக்கூடும் என்றார்.
News February 19, 2026
ராசி பலன்கள் (19.02.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.


