News January 9, 2026
புயல், மழை: இன்று 7 மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு அலர்ட்

2026-ன் முதல் <<18802928>>புயல்<<>> வங்கக் கடலில் இன்று (ஜன.9) உருவாகக்கூடும் என IMD கணித்துள்ளது. இந்நிலையில், இன்று திருவாரூர், நாகையில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், மயிலாடுதுறை, தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், காரைக்காலில் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், பள்ளி செல்லும் மாணவர்கள் குடை, ரெயின் கோட் உள்ளிட்டவற்றை மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள்.
Similar News
News January 12, 2026
சினிமா ரசிகர்களுக்கு இன்று செமத்தியான விருந்து!

உலக சினிமா துறையில் ஆஸ்கருக்கு அடுத்தபடியாக மதிக்கப்படும் கோல்டன் குளோப் 2026 விருதுகள் இன்று அறிவிக்கப்பட உள்ளன. இந்திய நேரப்படி இன்று காலை 6:30 மணிக்கு இந்த விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. Frankenstein, Sinners, Zootopia 2, One Battle After Another உள்ளிட்ட படங்களும், Adolescence வெப் சீரிஸும் விருதுக்கான ரேஸில் முன்னிலையில் உள்ளன. இதில் நீங்க பார்த்த படம்/வெப் சீரிஸ் இருக்கா?
News January 12, 2026
அப்துல் கலாம் பொன்மொழிகள்

*நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதும் மண்டியிடுவதில்லை. *கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே அது உன்னைக் கொன்றுவிடும். கண்ணைத் திறந்து பார் நீ அதை வென்றுவிடலாம். *துன்பங்களை சந்திக்க தெரிந்தவனுக்கு தோல்வியே இல்லை. *நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை, நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும் உன் உழைப்பால் அது உன் கைவந்து சேரும். *சாதிக்க துடிக்கும் புத்திசாலிகளை மட்டும் தான் ஆண்டவன் சோதிக்கிறான்.
News January 12, 2026
நாடு முழுவதும் ஒரு லட்சம் மாநாடுகளை நடத்தும் RSS!

RSS நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமாக, வரும் 15-ம் தேதி முதல் இந்து சம்மேளனங்களை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சாதி, வர்க்க வேறுபாடுகளை களைந்து இந்துக்களின் ஒற்றுமையை பிரதிபலிக்கும் வகையில் நாடு முழுவதும் ஒரு லட்சம் மாநாடுகள் நடத்தப்பட உள்ளன. ஆன்மிகவாதிகள், முக்கியஸ்தர்கள் பங்கேற்கும் இந்த மாநாட்டில் கலாசார நிகழ்ச்சிகள் இடம்பெற்று, சமபந்தி உணவுடன் முடியும்.


