News January 9, 2026

பொங்கல் கலை விழா குறித்து ஆலோசனை கூட்டம்!

image

கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கலைப் பண்பாட்டு துறையின் சார்பில் பொங்கல் கலை விழா நடத்திட மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் கள்ளக்குறிச்சி ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் இன்று (ஜன.08) நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜீவா மற்றும் கலை பண்பாட்டு துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News January 25, 2026

கள்ளக்குறிச்சி: புகையிலை விற்ற பெண் கைது!

image

திருக்கோவிலூர் அருகே அமைந்திருக்கும் அரகண்டநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் தேவரத்தினம் அவர் தலைமையிலான போலீசார் நேற்று அப்பகுதியில் அமைந்திருக்கும் மெயின் ரோடு பெட்டிக்கடையில் சோதனையில் ஈடுப்பட்டார். அப்போது, பூங்கோதை என்பர் கடையில் 15 பாக்கெட்டுகள் ஹான்ஸ் வைத்திருந்ததை கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது . இதனை தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தினர்.

News January 25, 2026

கள்ளக்குறிச்சி: தொழிலாளி ஏரியில் சடலமாக மீட்பு!

image

கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் அருகே அம்மன்கொல்லைமேடு பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வேலு (40), கடந்த 20ம் தேதி வேலைக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது மனைவி பூரணி அளித்த புகாரின் பேரில் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் ஜி.அரியூர் ஏரியில் வேலு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 25, 2026

கள்ளக்குறிச்சி: இரவு நேர ரோந்து பணி விவரம்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (ஜன.24) இரவு முதல் நாளை (ஜன.25) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!