News January 8, 2026

ராமதாஸுக்கு வக்காலத்து வாங்கிய திமுக அமைச்சர்

image

அதிமுகவுடன் கூட்டணி அமைத்த அன்புமணியை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார். பாமகவை தொடங்கியது ராமதாஸ்தான் என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள் எனக் கூறிய அவர், தந்தைக்கு துரோகம் செய்பவர்கள் மக்களுக்கு எப்படி உண்மையாக இருப்பார்கள் என அன்புமணியை மறைமுகமாக சாடினார். MRK-வின் இந்த பேச்சு மூலம் ராமதாஸ் திமுக பக்கம் செல்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Similar News

News February 18, 2026

அதிமுக கூட்டணியில் புதிய கட்சி

image

தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணியை அமைக்க அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், சோழப் பேரரசு கட்சியின் நிறுவனத் தலைவர் N. சரவணன் மழவராயர் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள் EPS-ஐ நேரில் சந்தித்து, தேர்தலில் அதிமுகவுக்கு முழு ஆதரவை அளிப்பதாக தெரிவித்தனர். அதேபோல், ஜனநாயக ஃபார்வர்ட் பிளாக், மனித உரிமைகள் கழகமும் அதிமுகவுக்கு ஆதரவு அளித்துள்ளன.

News February 18, 2026

நீங்கள் இறந்தது போன்ற கனவு வருகிறதா?

image

நீங்கள் உயிரிழப்பது போன்று எப்போதாவது கனவில் வந்ததுண்டா? இப்படிப்பட்ட கனவுகளால் நாம் நிஜமாகவே இறந்துவிடுவோம் என்று எண்ண வேண்டாம். நாம் ஏதோ ஒன்றை புதிதாக செய்யப்போகிறோம், நம்மிடம் இருந்து எதையோ நிறுத்திவிட்டு புதிய மனிதராக வாழப்போகிறோம் என்பதுதான் இந்த கனவுக்கு அர்த்தமாம். நடக்க இருக்கும் மாற்றத்தை உணர்த்தும் வகையிலே இது போன்ற கனவுகள் வருகிறதாம். அதனால் பயம் வேண்டாம்.. மாற்றம் ஒன்றே மாறாதது.

News February 18, 2026

நகைக் கடன் தள்ளுபடி முடிவு.. ஹேப்பி நியூஸ்

image

மகளிர் வங்கிக் கணக்கில் ₹5,000 டெபாசிட் செய்து TN அரசு இன்பஅதிர்ச்சி கொடுத்தது. இந்நிலையில், நகைக் கடன் தள்ளுபடி குறித்த தேர்தல் வாக்குறுதிக்காக மக்கள் காத்திருக்கின்றனர். அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக, கூட்டுறவு வங்கிகளில் நிலுவையிலுள்ள நகைக் கடன் விவரங்களை TN அரசு கேட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால், நகைக் கடன் தள்ளுபடி குறித்த வாக்குறுதி விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!