News January 8, 2026

ரூ.12 கோடி மதிப்பிலான ரிசர்வ் சைட் மீட்பு

image

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட 52-வது வார்டு பீளமேடு புதூர் பகுதியில் ரூ.12 கோடி மதிப்பிலான மாநகராட்சிக்கு சொந்தமான ரிசர்வ் சைட் கடந்த 2005 ஆம் ஆண்டு குடியிருப்புகளாக மாற்றி கிரையம் செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உத்தரவின் பேரில் நேற்று ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த இடம் மீட்கப்பட்டது.

Similar News

News February 18, 2026

கோவை: தொழில் தொடங்க ரூ.3 லட்சம் கடன்!

image

கோவை மக்களே, மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு மத்திய அரசு “உத்யோகினி யோஜனா” திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் கடன் உதவி வழங்குகிறது. இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <>கிளிக் <<>>செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். (தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு SHARE பண்ணுங்க)

News February 18, 2026

கோவை வருகிறார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

image

திமுக இளைஞர் அணி மேற்கு மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், வரும் பிப்.22-ம் தேதி கோவையில் நடைபெற உள்ளது. கோவை, கருமத்தம்பட்டி கணியூர் டோல்கேட் அருகில் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வில், திமுக இளைஞர் அணிச் செயலாளரும், தமிழக துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதற்காக கோவை மாவட்ட திமுக சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

News February 18, 2026

கோவை: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000

image

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். <>மேலும் விவரங்களுக்கு கிளிக்<<>> (அ ) மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

error: Content is protected !!