News January 8, 2026
செல்போனில் இதை செய்தால் ஜெயில் தண்டனை

டிஜிட்டல் யுகத்தில், இருந்த இடத்திலேயே செல்போனில் எல்லாவற்றையும் அறியலாம். ஆனால், கூகுளில் சில விஷயங்களை தேடிப் பார்த்தால் ஜெயில் தண்டனை கன்ஃபார்ம். வெடிகுண்டு தயாரிப்பது எப்படி, சாஃப்ட்வேர் உள்ளிட்டவற்றை ஹேக் செய்வது எப்படி என தேடுவது சட்டப்படி குற்றமாகும். மேலும், குழந்தைகளின் ஆபாச படங்கள், காப்பிரைட்டை மீறி திரைப்படங்களை டவுன்லோடு செய்வது உள்ளிட்டவற்றை செய்தாலும் நீங்கள் கம்பி எண்ணுவது உறுதி.
Similar News
News February 3, 2026
NDA + விஜய் கூட்டணி… நயினார் முடிவு இதுதான்!

திமுக, அதிமுக கூட்டணிகள் ஏறக்குறைய உறுதியாகிவிட்டன. விஜய்யும் தனித்தே களம் காணும் சூழல் உள்ளது. இந்நிலையில், விஜய்யை NDA-வில் சேர்ப்பது தொடர்பாக நயினார் நாகேந்திரன் கருத்து தெரிவித்துள்ளார். அதில், தங்களுடன் விஜய் கூட்டணிக்கு வந்தால் தவெகவிற்கும், தமிழ்நாட்டிற்கும் நல்லது என அவர் குறிப்பிட்டுள்ளார். திமுக, பாஜகவை மட்டுமின்றி அதிமுகவையும் விமர்சிக்கத் தொடங்கியுள்ள விஜய் இதற்கு சம்மதிப்பாரா?
News February 3, 2026
CBSE 10, 12-ம் வகுப்பு ஹால்டிக்கெட் வெளியானது!

CBSE 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. CBSE பொதுத் தேர்வுகள் பிப்.17-ம் தேதி முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் வெளியாகியுள்ள ஹால் டிக்கெட்டை மாணவர்கள் நேரடியாக டவுன்லோடு செய்ய முடியாது. அவற்றை சரிபார்த்து, கையொப்பமிட்டு மாணவர்களுக்கு விநியோகிப்பது பள்ளி நிர்வாகத்தின் பொறுப்பாகும்.
News February 3, 2026
தங்கம், வெள்ளி.. விலை ₹20,000 மாறியது

<<19039267>>தங்கத்தை போல்<<>> வெள்ளி விலையும் மீண்டும் ஏறுமுகத்திற்கு மாறியுள்ளது. காலையில் வெள்ளி கிலோவுக்கு ₹20,000 குறைந்த மகிழ்ச்சி ஒருநாள் கூட நீடிக்கவில்லை. மாலையில் அதே ₹20,000 அதிகரித்துள்ளது. சென்னையில் தற்போது, வெள்ளி 1 கிராம் ₹300-க்கும், 1 கிலோ ₹3 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 5 நாள்களில் மட்டும் வெள்ளி கிலோவுக்கு ₹1.25 லட்சம் குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


