News January 8, 2026

பொங்கல் பரிசாக ரேஷன் கார்டுக்கு ₹5,000 வழங்குக: பாஜக

image

TN-ல் ₹3,000 ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பு விநியோகம் இன்று தொடங்கியது. இந்நிலையில், புதுச்சேரியிலும் பொங்கல் பரிசுப் பணம் வழங்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது. அங்கு ₹750 மதிப்புள்ள பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில், தலா ₹5,000 வழங்குமாறு CM ரங்கசாமிக்கு, புதுச்சேரி பாஜக தலைவர் விபி ராமலிங்கம் கடிதம் எழுதியுள்ளார். கூட்டணியில் இருக்கும் பாஜகவின் கோரிக்கைக்கு ரங்கசாமி செவி சாய்ப்பாரா?

Similar News

News January 14, 2026

பொங்கல் பண்டிகை: இன்று முதல் தள்ளுபடி

image

Railone செயலி மூலம் முன்பதிவில்லா டிக்கெட்களை புக் செய்யும் போது, 3% தள்ளுபடி வழங்கும் திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. இச்சிறப்பு சலுகை வரும் ஜூலை 14-ம் தேதி வரை வழங்கப்படும். பெரும்பாலானோர் ரயில் டிக்கெட் புக் செய்ய IRCTC ஆப்பை பயன்படுத்தி வருகின்றனர். RailOne ஆப்பின் பயன்பாட்டை அதிகரிக்க இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் அனைவரும் பயன்பெற அதிகளவில் ஷேர் பண்ணுங்க.

News January 14, 2026

திமுகவா? தவெகவா? குழப்பத்தில் காங்கிரஸ்!

image

TN-ல் பல ஆண்டுகளாக ஆட்சியில் பங்கு இல்லாமல் இருக்கும் காங்., 2026 தேர்தலில் ஆட்சியில் பங்கு பெறுவதில் உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்., மூத்த தலைவர்கள் வெற்றியை உறுதி செய்ய திமுக கூட்டணியே சிறந்தது என்கின்றனர்; ஆனால், இளம் தலைவர்களோ தவெகவிடம் 75 இடங்கள் வரை பெறுவதோடு, ஆட்சியில் பங்குபெறலாம் என கருதுவதாக கூறப்படுகிறது. இதனால், காங்.,-ல் குழப்பம் நீடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

News January 14, 2026

மகளிருக்கு ₹5,000 மானியம்.. அரசு அறிவிப்பு

image

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள், கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள் தொழில் தொடங்க அரசு மானியம் அறிவித்துள்ளது. இதற்கு, பிறப்புச் சான்று, BLP கார்டு(வறுமைக் கோட்டு அட்டை), வருமானச் சான்று ஆகிய ஆவணங்கள் தேவை. இந்த ஆவணங்களுடன், தகுதியுடைய பெண்கள் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். ₹10,000-க்கு மேல் உள்ள கிரைண்டர் வாங்க 50% அல்லது ₹5,000 மானியமாக வழங்கப்படுகிறது.

error: Content is protected !!