News January 8, 2026

ராணிப்பேட்டை: இனி அனைத்து சான்றிதழும் ஒரே CLICK-ல்!

image

உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையாக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது<> E-பெட்டகம் <<>>என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ளே சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யலாம். ஷேர் பண்ணுங்க!

Similar News

News January 15, 2026

ராணிப்பேட்டை: பொங்கல் நேரத்தில் கரண்ட் கட்டா?

image

பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தின் போது தடையற்ற மின்சாரம் வழங்க சென்னை மின்சார வாரியம் உறுதி பூண்டுள்ளது. ஒருவேளை மின் தடை ஏற்பட்டால் லைன்மேனைத் தேடி நீங்கள் அலைய வேண்டாம். 94987 94987 என்ற எண்ணிற்கு அழைத்து உங்கள் மின் இணைப்பு எண்ணைக் கூறினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன்மேன் உங்கள் பிரச்னையை சரிசெய்வார். பொங்கல் ஒளிமயமாக அமைய மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

News January 15, 2026

இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை வாழ்த்து!

image

இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பில் பொங்கல் திருநாளை முன்னிட்டு இன்று (ஜன.15) பொதுமக்களுக்கு இனிய வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் பொங்கல் திருநாள் மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி, நலன் மற்றும் வளம் கொண்டு வர வாழ்த்தி, பாதுகாப்பான மற்றும் அமைதியான திருநாளை கொண்டாடுமாறு வாழ்த்துதல் தெரிவித்துள்ளார்.

News January 15, 2026

ராணிப்பேட்டை: 8th, 10th, +2, முடித்தவரா நீங்கள்? சூப்பர் வாய்ப்பு!

image

ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் ஜனவரி 23-ம் தேதி நடைபெற உள்ளது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 10 மணி முதல் நடைபெற இருக்கும் இந்த முகாமில், இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெற மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் விவரங்களுக்கு 04172-291400, 9488466466, 9952493516 என்ற எண்களை தொடர்புகொள்ளவும்.

error: Content is protected !!