News January 8, 2026
இயற்கை நாயகன் காலமானார்

இந்தியாவின் புகழ்பெற்ற Environmentalist மாதவ் கட்கில் (83) உடல்நலக் குறைவால் காலமானார். மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க Gadgil Report மூலம் உலக கவனத்தை பெற்றவர், தேசிய சுற்றுச்சூழல் கொள்கைகளில் நிலையான மாற்றங்களை உருவாக்குவதிலும் முக்கிய பங்கு வகித்துள்ளார். 2024-ல் U.N-ன் Champions of the Earth என்ற கௌரவத்தை பெற்ற இவர், பத்மஸ்ரீ (1981), பத்மபூஷன் (2006) உட்பட பல விருதுகளை பெற்றுள்ளார். #RIP
Similar News
News January 30, 2026
அதிமுகவை Washing Machine-ல் வெளுத்துட்டீங்களா? CM

பாஜகவுடன் இருப்பவர்கள் எல்லோரும் ஊழல்வாதிகள்தான் என CM ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அதிமுகவினர் கூட SC வரை சென்று ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள்தான் என்ற அவர், கூட்டணியில் இல்லாத சமயத்தில் அதிமுக மீது பல ஊழல் குற்றச்சாட்டுகளை பாஜக வைத்தது என சுட்டிக்காட்டினார். மேலும், இப்போது உங்கள்(பாஜக) Washing Machine-ல் அவர்களை(அதிமுக) எல்லாம் வெளுத்துட்டீர்களா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
News January 30, 2026
வரதட்சணை.. Dumbbells-ஆல் அடித்து கொன்ற கணவன்!

டெல்லி SWAT கமாண்டோ காஜல் சௌத்ரியை (27), கணவர் அங்கூர் Dumbbell-ஆல் அடித்து கொலை செய்துள்ளார். 2023-ல் திருமணமான நிலையில், வரதட்சணை தகராறு இருந்துள்ளது. கடந்த 22-ம் தேதி காஜல் சகோதருடன் போனில் பேசிய போது, போனை பறித்த அங்கூர், ‘உன் சகோதரியை கொல்லப் போறேன்’ என கூறி காஜலை அடித்துள்ளார். இதில், பலத்த காயமடைந்த காஜல், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மரணித்த போது அவர் 4 மாத கர்ப்பமாக இருந்துள்ளார்.
News January 30, 2026
உள்ளாடையுடன் போட்டோ ஷூட்டுக்கு NO சொன்ன நடிகை

போட்டோஷூட் என்ற சிலர் தன்னிடம் அநாகரிகமாக நடந்து கொண்டது குறித்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பகிர்ந்து கொண்டுள்ளார். போட்டோ எடுக்க சென்ற ரூமிற்குள் இருந்த மூவர் தன்னை ‘Lingerie’ அணியும் படி வற்புறுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அவர்களிடம் மறுப்பு தெரிவித்துவிட்டு வெளியே வந்து விட்டதாகவும், தற்போதும் அச்சம்பவத்தின் தாக்கத்தில் இருந்து மீள முடியவில்லை எனவும் வருத்தம் தெரிவித்துள்ளார்.


