News May 4, 2024
ரோஸ் மில்க் – உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை

மதுரை உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ஜெயராம பாண்டியன் நேற்று விடுத்த அறிக்கையில், ரோஸ் மில்க் குளிர்பானத்தில் எரித்ரோமைசின் , கார்மோய்சைன் , பான்சீ 4 ஆர் போன்ற நிறமிகள் குறிப்பிட்ட அளவு சேர்க்க மத்திய அரசு அனுமதித்துள்ளது. அதேபோல ‘ரோடமைன் பி, பாஸ்ட் ரெட்’ நிறமிகள் தடை செய்யப்பட்டுள்ளன. இவற்றை பயன்படுத்துவது தெரிந்தால் கடைக்கு ‘சீல்’ வைப்பதோடு அபராதம் விதிக்கப்படும் என்றார்
Similar News
News September 13, 2025
மதுரை காமராசர் பல்கலை.யில் வேலை!

மதுரை காமராசர் பல்கலை-யில் கீழகண்ட 3 பணியிடங்களுக்கு காலிபணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.
⏩பதவியின் பெயர்: JRF, Technical Assistant
⏩கல்வித்தகுதி:B.Sc, M.Sc
⏩மாத ஊதியம்:ரூ.20,000 டூ ரூ.37,000
⏩ கடைசி தேதி: 15.09.2025
⏩விண்ணப்பிக்கும் முறை: <
⏩அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News September 13, 2025
மதுரை: பிரபல தொழிலதிபர்கள் இடங்களில் ரெய்டு

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொழிலதிபர்கள் மணி (எ)முத்தையா மற்றும் மருது பாண்டியனுக்கு சொந்தமான எம்.வி.எம் நிறுவனங்களில் சி.பி.சி.ஐ.டி போலீசார் நேற்று சோதனை நடத்தினர். இவர்கள் மீது சில ஆண்டுகளுக்கு முன் ‘இரிடியம்’ குறித்த பண மோசடி புகார் எழுந்தது. அடுத்தடுத்து புகார்கள் எழுந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் வருவாய்துறை அதிகாரிகள் முன்னிலையில் நேற்று இங்கு சோதனையை நடத்தினர்.
News September 13, 2025
மதுரையில் கூகுள் மேப்பை பயன்படுத்தி கொள்ளை

வாடிப்பட்டி பகுதியில் அடுத்தடுத்துள்ள 4 கோயில்களில் ஆடிப்பெருக்கு அன்று இரவு உண்டியலை உடைத்து திருடிய சமயநல்லுார் ரூபன்31, சேகர் 22, வடகாடுபட்டி தமிழழகன்22 ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர். 4 கிராம் தங்கம், ரூ.50,000 பறிமுதல் செய்யப்பட்டது. விக்கிரமங்கலம் பகுதியில் மதுஅருந்தும் இடத்தில் பழகி நண்பர்களான இவர்கள், விசேஷ நாட்களை நோட்டமிட்டு கூகுள் மேப்பில் கோவில்களை கண்டறிந்து திருடியது அம்பலமானது.