News January 8, 2026
தருமபுரி: INDIA POST-ல் வேலை – NO EXAM!

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் & தபால் சேவகர் பணிகளுக்கு 30,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு கண்டிப்பாக தமிழ் தெரிந்திருக்க வேண்டும், அதேபோல் சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். இந்த பணிக்கு தேர்வு கிடையாது, 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். விருப்பமுள்ளவர்கள் இந்த <
Similar News
News January 26, 2026
தருமபுரி: ரயில் கிடந்த பொட்டலம்; பிரித்ததும் அதிர்ச்சி!

அரூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் நேற்று (ஜன.25) தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சோதனை நடத்தினார். அப்போது அந்த ரெயிலில் பொதுப்பெட்டியில் உள்ள கழிவறை அருகே கேட்பாரற்று கிடந்த பையில் 10 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. மேலும் போலீசாரை கண்டதும் கஞ்சா கடத்தி வந்தவர்கள் தப்பி சென்றது தெரிந்தது. இதையடுத்து போலீசார் ரூ.1 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்து வருகின்றனர்.
News January 26, 2026
தருமபுரி: தூக்கில் தொங்கிய கணவர்!

ராஜாகொல்லஅள்ளி பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி தட்சிணாமூர்த்தி (30). இவரது மனைவி பெற்றோர் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த தட்சிணாமூர்த்தி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த இண்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 26, 2026
தருமபுரி: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று ஜன.25 இரவு முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் சதிஷ்குமார் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் உலகநாதன், தொப்பூரில் குமரவேல், மதிகோன்பாளையத்தில் சின்னசாமி ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம். ஷேர் பண்ணுங்க!


