News May 4, 2024
கடலூரில் மஞ்சள் அலர்ட்

அரபிக்கடலோரப் பகுதிகளில் அதீத அலை ஏற்படவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கடலூரில் கடல் அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடல் அலைகள் 1.5 மீட்டர் உயரத்திற்கு எழும் என்பதால் மக்கள் யாரும் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என்றும், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும், படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Similar News
News November 7, 2025
கடலூர்: அரசு டிரைவர் வேலை – கலெக்டர் அறிவிப்பு

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் ஈப்பு ஓட்டுநர் மற்றும் இரவு காவலர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். அதில், கடலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் இன சுழற்சி மூலம் நிரப்பப்படவுள்ளது. <
News November 7, 2025
கடலூர்: சுகாதார ஆய்வாளர் வேலை அறிவிப்பு

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் பணிக்கு (Health Inspector Grade-II) 1429 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12ம் வகுப்பு & 2 வருட சுகாதார பணியாளர் படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<
News November 7, 2025
கடலூர்: மனைவி கண்டித்ததால் தற்கொலை

காட்டுமன்னார்கோயில் அடுத்த குருங்குடியை சேர்ந்தவர் தொழிலாளி அன்பழகன் (46). இவர் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்ததை, அவரது மனைவி வனிதா கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் விஷத்தை குடித்து விட்டார். பின்னர் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அன்பழகன் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.


