News January 8, 2026
இறந்த சகோதரிக்கு கோயில் கட்டிய சகோதரர்

சகோதர – சகோதரி பாசம் என்றாலே ‘பாசமலர்’ படம்தான் நினைவுக்கு வரும். ஆனால், இச்செய்தியை படித்த பிறகு, இந்த சகோதரரும் உங்களின் நினைவில் நின்றுவிடுவார். ஆந்திராவின் நெல்லூர் பகுதியில் 14 ஆண்டுகளுக்கு முன் விபத்தில் உயிரிழந்த தனது சகோதரிக்கு, அவரது சகோதரர் கோயில் ஒன்றை கட்டியுள்ளார். சகோதரியை தெய்வமாகவே பாவித்து, தினமும் சிறப்பு பூஜைகளயும் செய்து வழிபட்டு வருகிறார். இந்த காலத்தில் இப்படியும் சிலர்!
Similar News
News February 2, 2026
FLASH: முன்னாள் அமைச்சர் காலமானார்

ராஜஸ்தான் மாநில பாஜக முக்கிய தலைவரும், EX அமைச்சருமான ஹேம் சிங் பதானா(55) காலமானார். கேன்சர் பாதிப்பால் கடந்த 5 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சற்றுமுன் அவரது உயிர் பிரிந்தது. குர்ஜார் சமூகத்தின் முக்கிய முகமாக அறியப்பட்ட ஹேம் சிங் பதானா, வசுந்தரா ராஜேவின் அமைச்சரவையில் முக்கிய பங்கு வகித்தார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
News February 2, 2026
தமிழக அரசு என் படத்த கண்டுக்கல: சேரன் வேதனை!

‘திருமணம்’ படத்திற்கு தமிழக அரசின் விருது கிடைக்காததை இயக்குநர் சேரன் விமர்சித்துள்ளார். தேர்வு குழுவினரால் தனது படம் கண்டுகொள்ளப்படாமல் போனது அவர்களின் நுண்ணிய பார்வை அற்ற தன்மை அல்லது தங்களை சார்ந்துள்ளவர்களுக்கு மட்டுமே விருது கொடுக்கும் தன்மையை காட்டுவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், நேர்மையான முறையில் பாரபட்சமின்றி விருதுகள் சென்றைடைய வேண்டும் எனவும் தனது பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News February 2, 2026
மத வன்முறையை தூண்டுவதே பாஜகவின் எண்ணம்: CM

எந்த வகையில் மத வன்முறையை தூண்டலாம் என்பதே பாஜகவின் நோக்கம் என CM ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் பாஜகவின் நோக்கத்துக்கு மௌன சாட்சியாக அதிமுக அமைதி காக்கிறதாகவும், தமிழகத்தை வஞ்சிக்கும் பாஜகவுக்கு அதிமுக சாமரம் வீசும் அடிமையாக உள்ளதாகவும் விமர்சித்துள்ளார். மாநில சுயாட்சி என்றாலே அதிமுக பயந்து ஒளிந்துகொள்கிறது எனவும் தொண்டர்களுக்கு CM ஸ்டாலின் எழுதிய மடலில் குறிப்பிட்டுள்ளார்.


