News January 8, 2026

தூத்துக்குடி: வியாபாரி அடித்துக்கொலை.. 3 பேர் கைது

image

சாத்தான்குளம் அருகே முதலூரை சேர்ந்தவர் மார்ட்டின் (30). கார் வியாபாரியான இவர் நேற்று முன்தினம் நெல்லை சீவலப்பேரி அருகே சுடுகாட்டில் அடித்து கொலை செய்யப்பட்டு இருந்தார். இது தொடர்பாக நெல்லை போலீசார் மேற்கொண்ட விசாரணையில் உடையார்பட்டியை சேர்ந்த நம்பிராஜன் 31, பணகுடியை சேர்ந்த கிதியோன் 20, தோணித்துறையை சேர்ந்த முருகப்பெருமாள் 22 ஆகியோர் கொலை செய்தது தெரிந்தது. போலீசார் இவர்களை நேற்று கைது செய்தனர்.

Similar News

News February 12, 2026

தமிழ்நாடு நாட்டுப்படகு சங்கத் தலைவர் காலமானார்

image

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட மனப்பாடு மீனவ கிராமத்தில் நாட்டுபடகு சங்கத் தலைவர் மற்றும் சமுதாய தலைவரான கயாஸ் இன்று இயற்கை எய்தினார். அவரது நல்லடக்கம் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறும் என்று குடும்பத்தினர் தெரிவித்தனர். துக்கம் அனுசரிக்கும் விதமாக நாளை(பிப்.13) மீனவர் கிராமங்களில் யாரும் மிக பிடிக்கக் செல்ல மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News February 12, 2026

தூத்துக்குடி : வங்கி கணக்கில் அடிக்கடி Fine விழுகுதா?

image

தூத்துக்குடி மக்களே, உங்க வங்கியில் Minimum Balance இல்லைன்னு ரூ. 100,200 பணம் பிடிக்கீறார்களா? இதில் இருந்து தப்பிக்க வழி இருக்கு. இ<>ங்கு க்ளிக் <<>>செய்து மத்திய அரசின் பிரதம மந்திரி ஜன தன் (PMJDY) திட்டத்தின் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வங்கியில் கொடுங்க. உங்க வங்கி கணக்கு மாறிவிடும்.. இனி தேவையில்லாத FINE விழுகாது.. இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க…!

News February 12, 2026

தூத்துக்குடி இளைஞர்களே நாளை மிஸ் பண்ணாதீங்க…!

image

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் தொழில்நெறி வழிகாட்டு மையம் ஆகியவை இணைந்து வேலையில்லாத இளைஞர்கள் பயன்பெறும் வகையில் நாளை தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் நடைபெறும் இந்த முகாமில் வேலை நாடுவோர் கலந்து கொண்டு பயன்பெற தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் கேட்டுக் கொண்டுள்ளார். ஷேர்…!

error: Content is protected !!