News January 8, 2026

ராமநாதபுரத்தில் ஜன.25- முதல் துவக்கம்

image

இராமநாதபுரம் ராஜா பள்ளி மைதானத்தில் வருகிற ஜன.25 அன்று தொடங்கி பிப்.04 வரை பத்து நாட்கள் 8-ஆம் ஆண்டு புத்தக திருவிழா நடைபெற உள்ளது. இதில் அறிவியல் கண்காட்சி மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. புத்தக திருவிழா நடைபெறும் பத்து நாட்களுக்கு விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், அறிஞர்கள் பங்கேற்கும் கருத்தரங்குகள், பட்டிமன்றம் ஆகியவை நடைபெற உள்ளன.

Similar News

News January 24, 2026

இராமநாதபுரம் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று மிதமான மழை பெய்து வரும் நிலையில், நாளை(ஜன.25) கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இராமநாதபுரம், புதுக்கோட்டை, கடலூர், நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க.

News January 24, 2026

இராம்நாடு: அணி மாறும் எம்.பி; வலுக்கும் போட்டி!

image

ஓபிஎஸ்-ன் தீவிர ஆதரவாளரான ராஜ்யசபா எம்.பி தர்மர், அதிமுகவில் இன்று இணைய உள்ளார் என தகவல். முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்த எம்.பி நவாஸ்கனி, அமைச்சர் ராஜ கண்ணப்பன் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், எம்.பி தர்மர் அதிமுகவில் இணைவது இபிஎஸ்-க்கு கூடுதல் வலு சேர்க்கும் என கூறப்படுகிறது. இதனால் வரும் சட்டமன்றத் தேர்தலில் இராமநாதபுரத்தில் கடும் போட்டி உருவாகலாம்!

News January 24, 2026

இராம்நாடு: போஸ்ட் ஆபீஸில் வேலை!

image

இராம்நாடு மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். இங்கு <>கிளிக்<<>> செய்து, விண்ணப்பிக்கலாம். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!