News January 8, 2026
அதிமுகவில் OPS இல்லை.. இபிஎஸ் கொடுத்த அதிர்ச்சி

அதிமுகவில் OPS, சசிகலாவுக்கு ஒருபோதும் இடமில்லை என டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த பேசியபின், EPS தெளிவுபடுத்தியுள்ளார். அதேநேரம், அதிமுக கூட்டணியில் TTV தினகரன் இடம் பெறுவாரா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு மறுப்பு தெரிவிக்காத அவர், சில கட்சிகளுடன் கூட்டணி குறித்துப் பேசி வருவதாக கூறியுள்ளார். இதனால், NDA கூட்டணியில் TTV-யை சேர்க்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
Similar News
News January 23, 2026
தவெகவில் இணைகிறாரா புகழேந்தி?

OPS ஆதரவாளராக இருந்துவந்த புகழேந்தி தவெகவில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக, OPS, டிடிவி தரப்பில் உள்ள அதிருப்தி நிர்வாகிகள் பலரையும் சேர்த்து கூண்டோடு அவர் தவெகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 10 நாள்களில் தனது அரசியல் நிலைப்பாட்டை கூறவுள்ளதாக புகழேந்தி தெரிவித்துள்ளார். மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கத்தை தொடர்ந்து புகழேந்தியும் கட்சி மாறுவது OPS-க்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
News January 23, 2026
ஆர்டர் பண்ணாமலே பொருள் வருதா… கவனமா இருங்க

Flipkart, Amazon ஆகியவற்றில் ஆர்டர் செய்யாமலே உங்களுக்கு பொருள் வந்துள்ளது என கூறி சிலர் நூதன மோசடி செய்து வருகிறார்கள். அந்த ஆர்டரை கேன்சல் பண்ண, ஒரு கஸ்டமர் கேர் நம்பரை கொடுக்கிறார்கள். நீங்கள் அதில் அழைத்து பேசினால், ஒரு OTP-யை அனுப்புகிறார்கள். அதை நீங்க சொன்ன உடனேயே, உங்க போன் நம்பருடன் லிங்க் ஆகியிருக்கும் பேங்க் அக்கவுண்ட்டில் இருக்கும் பணத்தை எடுத்து விடுகின்றனர்.
News January 23, 2026
இனி மாதந்தோறும் ₹3,000 பென்ஷன்.. அரசின் திட்டம்

அமைப்புசாரா தொழிலாளர்கள்(கட்டட வேலை, தினக்கூலி, நிரந்த வேலை இல்லாதவர்கள்) வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு இ-ஷ்ரம் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. 60 வயதுக்கு பிறகு மாதந்தோறும் ₹3,000 பென்ஷன் கிடைக்கும். இத்திட்டத்தில் இணைய 18 -40 வயதுக்குள் இருக்க வேண்டும், ஆண்டு வருமானம் ₹2 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். தகுதியுடைய நபர்கள் <


