News January 8, 2026

தூத்துக்குடி: பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை

image

காடல்குடி கிராமத்தை சேர்ந்த கருப்பசாமி என்பவரின் மகன் கருமுருகன் (25). இவர் விளாத்திகுளத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் பயின்று வரும் 9 வயது சிறுமி மற்றும் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, சிறுமிகளின் பெற்றோர் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் பேரில் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கருமுருகனை போக்ஸோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Similar News

News February 8, 2026

தூத்துக்குடி எஸ்பி எச்சரிக்கை

image

தூத்துக்குடியில் நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு விசாரணைக்கு ஆஜராகாத 99 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 17 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். 20 குற்றவாளிகள் மீது பிணைப்பத்திரம் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.

News February 8, 2026

தூத்துக்குடி: 23 காலிபணிடங்களை அறிவித்த ஆட்சியர்

image

தூத்துக்குடி மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மற்றும் வட்டார இயக்க மேலாண்மை அலகில் காலியாக உள்ள 23 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு ஒப்பந்த முறையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பங்களை பூர்த்தி செய்து மாவட்ட இயக்க மேலாண்மை அலுவலகத்தில் பிப்.16 க்குள் சமர்பிக்க வேண்டும் என ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார். SHARE IT

News February 7, 2026

தூத்துக்குடி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் <>cmcell.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.

error: Content is protected !!