News January 8, 2026

முன்னாள் அமைச்சர் கபீந்திர புர்கயஸ்தா காலமானார்

image

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், EX மத்திய அமைச்சருமான கபீந்திர புர்கயஸ்தா(94) உடல் நலக்குறைவால் காலமானார். அசாம் மாநிலத்தை சேர்ந்த இவர், 1998-ல் வாஜ்பாயின் அமைச்சரவையில் IT துறை அமைச்சராக இருந்தார். நல்லதொரு சமூக சேவகரை இழந்துவிட்டோம் என கபீந்திர புர்கயஸ்தா மறைவுக்கு PM மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Similar News

News February 4, 2026

CM ஸ்டாலின் எனது நண்பர்: நயினார் நாகேந்திரன்

image

தமி​ழ​கத்​தில் சத்​துணவு, அங்​கன்​வாடி பணியாளர்​கள் என 2 லட்​சம் பேர் வீதி​யில் இறங்​கிப் போராடும் அவலநிலை ஏற்​பட்​டுள்​ளதாக நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். காலமுறை ஊதியம் வழங்கப்படும் என அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் திமுக ஏமாற்றியுள்ளதாகவும் சாடியுள்ளார். அதேசமயம் CM ஸ்டாலின் தனது நண்பர்தான், ஆனால் நிர்வாகம் சரியில்லை என்பதே தன்னுடைய விமர்சனம் என கூறியுள்ளார்.

News February 4, 2026

உலக புற்றுநோய் தினம் இன்று!

image

உலக புற்றுநோய் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் கருப்பொருளான ‘United by Unique’, ஒவ்வொரு புற்றுநோய் பாதிப்பும் தனித்துவமானது என்பதை வலியுறுத்துகிறது. நாள்பட்ட இருமல், தலைவலி, உணவு விழுங்க சிரமம், சரும மாற்றங்கள், தொடர்ச்சியான சோர்வு, அடிக்கடி காய்ச்சல், காரணமற்ற எடை இழப்பு போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

News February 4, 2026

விஜய் இப்படி சொல்லலாமா? TTV தினகரன்

image

‘அதிமுகவை ஊழல் கட்சி’ என்று விஜய் கூறுவது தவறு என TTV தினகரன் கூறியுள்ளார். தனது ரோல் மாடலாக MGR, ஜெ.,வை கூறிவிட்டு, செங்கோட்டையனையும் விஜய் சேர்த்துக்கொண்டதை குறிப்பிட்டு பேசிய அவர், சுற்றியிருப்பவர்கள் சொல்வதை மட்டும் கேட்காமல் அவர் கொஞ்சம் வெளியே வந்து பார்க்கவேண்டும் என்றார். மேலும், விஜய் தங்களுக்கு எதிரி அல்ல எனவும் தங்களது ஒரே எதிரி திமுகதான் என்றும் அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!