News January 8, 2026
கடலூர்: நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு

சிதம்பரம் மாரியப்பா நகரை சேர்ந்தவர் கலா (50). அண்ணாமலை பல்கலைக்கழக நூலகத்தில் பணிபுரிந்து வரும் இவர், நேற்று மாலை வேலை முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மாரியப்பா நகர் அருகே சென்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த மர்ம நபர்கள் கலா கழுத்தில் இருந்த 11 சவரன் செயினை பறித்து சென்றனர். இதுகுறித்து அண்ணாமலை நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News January 25, 2026
கடலூர்: 12th போதும்..அரசு வேலை!

இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 312
3. வயது: 18 – 40
4. சம்பளம்: ரூ.44,900
5. தகுதி: 12-ஆம் வகுப்பு
6. கடைசி தேதி: 29.01.2026
7. விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News January 25, 2026
கடலூர்: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதே போன்று, A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar)
B – (Apr/May/Jun)
C – (Jul/Aug/Sep)
D – (Oct/Nov/Dec)
இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!
News January 25, 2026
கடலூர்: திருட்டு வழக்கில் தொடர்புடையவர் கைது

அண்ணாமலை நகர் காவல் ஆய்வாளர் அம்பேத்கர் தலைமையிலான காவல்துறையினர் நேற்று (ஜன.24) வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அம்மன் கோவில் பகுதியை சேர்ந்த தேவபாலன் என்பவரை விசாரணை செய்ததில், அவர் பல பகுதிகளில் மின்மாற்றிகளை திருடிய வழக்கில் தொடர்புடையவர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


