News January 8, 2026
தருமபுரியில் விஷம் குடித்து தற்கொலை!

மாதேஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோ(59). விவசாயியான இவர், தனது வீட்டில் விஷம் அருந்து மயங்கிக் கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்த பாப்பாரப்பட்டி போலீசார், அவரது தற்கொலை காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News January 26, 2026
தருமபுரியில் கரண்ட் கட்; உங்க ஏரியா இருக்கா?

தருமபுரி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் நாளை (ஜன.27) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி தருமபுரி, பஜார் தெரு, தருமபுரி பேருந்து நிலையம், மதிக்கோண்பாளையம், அன்ன சாகரம், கடகத்தூர், ஏ. ஜெட்டிஹள்ளி, செட்டிக்கரை, கோம்பை, முக்கள்நாயக்கன்பட்டி, நூலஹள்ளி, குப்பகரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும்.
News January 26, 2026
தருமபுரி: ரயில் கிடந்த பொட்டலம்; பிரித்ததும் அதிர்ச்சி!

அரூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் நேற்று (ஜன.25) தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சோதனை நடத்தினார். அப்போது அந்த ரெயிலில் பொதுப்பெட்டியில் உள்ள கழிவறை அருகே கேட்பாரற்று கிடந்த பையில் 10 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. மேலும் போலீசாரை கண்டதும் கஞ்சா கடத்தி வந்தவர்கள் தப்பி சென்றது தெரிந்தது. இதையடுத்து போலீசார் ரூ.1 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்து வருகின்றனர்.
News January 26, 2026
தருமபுரி: தூக்கில் தொங்கிய கணவர்!

ராஜாகொல்லஅள்ளி பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி தட்சிணாமூர்த்தி (30). இவரது மனைவி பெற்றோர் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த தட்சிணாமூர்த்தி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த இண்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


