News January 8, 2026
BREAKING: பாமகவில் மீண்டும் இணைந்தார்.. அரசியல் மாற்றம்

தவாகவில் இருந்து விலகிய கள்ளிப்பட்டு ஆறுமுகம் தனது ஆதரவாளர்கள் 5,000 பேருடன் அன்புமணி முன்னிலையில் மீண்டும் பாமகவில் இணைந்துள்ளார். நேற்று இரவு கடலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இந்த இணைப்பு விழா நடைபெற்றுள்ளது. பாமகவிலிருந்து விலகி தவாகவை தொடங்கிய பண்ருட்டி வேல்முருகனுடன் இணைந்து அக்கட்சியை வளர்க்க முக்கிய பங்காற்றியவர். இதனால், திமுக கூட்டணியில் உள்ள தவாக தரப்பினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Similar News
News February 2, 2026
கருத்து கணிப்பா? கடுப்புல விட்ட கணிப்பா? விஜய்

தற்போது வரும் கருத்து கணிப்புகளில் சில கணிப்புகள் கடுப்பில் விட்ட கணிப்பாக இருக்கிறது என விஜய் கிண்டலடித்துள்ளார். கருத்து கணிப்பு நடத்துபவர்கள் ஒவ்வொரு வீடாக சென்றால் அனைத்து வீடுகளிலும் தவெகவுக்கு ஆதரவு இருக்கும் என்ற அவர், அது அதிர்ச்சியாக இருந்தால் ரப்பர் வைத்து அழித்து மீண்டும் கருத்து கணிப்பை நடத்தி பார்க்கும்படி கூறியுள்ளார். அத்துடன், உண்மையான கணிப்புகளை மதிப்பதாகவும் பேசியுள்ளார்.
News February 2, 2026
சுற்றுலா மாநாட்டில் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து

மாமல்லபுரத்தில் 2 நாள்கள் நடைபெறும் உலகளாவிய சுற்றுலா மாநாட்டை CM ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவரின் முன்னிலையில் முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின. இந்த மாநாடு பல்வேறு சுற்றுலா தளங்களை மேம்படுத்துவதற்கும், சுற்றுலா முதலீட்டாளர்களுடன் தனியார் பங்களிப்பை ஊக்குவிப்பதற்கும் ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 2, 2026
தங்கம், வெள்ளி: எதில் முதலீடு செய்வது சிறந்தது

தங்கத்தை விட வெள்ளியில் முதலீடு செய்வதே அதிக லாபத்தை தரும் என தங்க நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி தெரிவித்துள்ளார். தங்கத்தில் ₹1 லட்சம், வெள்ளியில் ₹1 லட்சம் என முதலீடு செய்தால், 1 வருடம் கழித்து தங்கம் ₹1,15,000 ஆகவும், வெள்ளி ₹1,25,000 ஆகவும் இருக்கும் என விளக்கியுள்ளார். ஆபரணமாக மட்டும் இல்லாமல் தொழிற்சாலைகளுக்கும் வெள்ளி தேவைப்படுவதால் அதன் மதிப்பு அதிகம் என அவர் கூறியுள்ளார்.


