News January 8, 2026

பராசக்தியில் கேமியோ இவர் தான்: சிவகார்த்திகேயன்

image

‘பராசக்தி’ படத்தில், மலையாள நடிகர் ஒருவர் கேமியோவில் நடித்திருப்பதாக ஏற்கெனவே தகவல் வெளியானது. இந்நிலையில், அது அனைவருக்கும் பிடித்த பாசில் ஜோசப் தான் என சிவகார்த்திகேயன் உறுதிப்படுத்தியுள்ளார். இத்தகவலை ரிலீஸுக்கு முன்பே கூற சுதா கொங்கராவிடம் அனுமதி வாங்கிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். பராசக்தி படக் குழுவினர் சஸ்பென்ஸ்களை வெளியிட்டு வருவது மேலும் ஆர்வத்தை தூண்டி வருகிறது.

Similar News

News February 2, 2026

PM KISAN திட்டத்தின் நிதி ₹10,000?.. CLARITY

image

PM KISAN திட்டத்தின் கீழ், நலிவடைந்த விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 3 தவணைகளாக மத்திய அரசு ₹6,000 வழங்கி வருகிறது. இந்த தொகையை ₹10,000 ஆக உயர்த்துமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், இதுதொடர்பாக பட்ஜெட்டில் அறிவிப்பு இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட நிலையில், அப்படி எதுவும் இடம்பெறவில்லை. இத்திட்டத்தின் 22-வது தவணைத் தொகை (₹6,000) இந்த வாரத்திற்குள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

News February 2, 2026

69 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்!

image

ஒரு பிரசவமே கடினமாகிவிட்ட நிலையில், இவரின் கதை ஒரு அதிசயமே! ரஷ்யாவை சேர்ந்த Feodor Vassilyev என்பவரின் மனைவி, Valentina Vassilyev 1725- 1765 ஆண்டுகளுக்கு இடையில், 27 பிரசவங்களில் 69 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். இதில் 16 இரட்டையர்கள்,7 triplets (ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள்), 4 quadruplets (ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்) பிரசவங்களும் அடங்கும். அதிக குழந்தைகளை பெற்றெடுத்த கின்னஸ் சாதனை இவருடையதே!

News February 2, 2026

‘நாங்கள் சாகப் போகிறோம்’

image

தலைப்பை பார்த்ததும் பதற்றம் ஏற்படுகிறதா? கோவை பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்த மின்வாரிய அதிகாரி கமலேஷ், இப்படித்தான் தனது உறவினர்களிடம் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். உறவினர்கள் உடனடியாக அவரது வீட்டிற்கு சென்றபோது, கமலேஷ், அவரது மனைவி இலக்கியா, மகள் ஏஞ்சல்(10) ஆகியோர் விஷம் அருந்தி உயிரற்ற உடல்களாக கிடந்துள்ளனர். மூவரின் உடல்களையும் கைப்பற்றி போலீஸ் விசாரித்து வருகிறது. தற்கொலை எதற்கும் தீர்வல்ல!

error: Content is protected !!