News January 8, 2026
தமிழகத்தில் மீண்டும் டபுள் டக்கர் பஸ்!

தமிழக சுற்றுலாத்துறைக்கு கிப்ட்டாக டபுள் டக்கர் பஸ்-ஐ அமெரிக்க வாழ் தமிழர்கள் வழங்கி உள்ளனர். அமெரிக்க பயணத்தின்போது அங்குள்ள தமிழர்களிடம் CM இதுதொடர்பாக பேசியிருந்தார் என்றும், இந்நிலையில் அசோக் லேலண்ட் CSR & US தமிழர்கள் உதவியுடன் அது பெறப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் TRB ராஜா குறிப்பிட்டுள்ளார். ஜன.12, அயலக தமிழர் தினத்தன்று CM இப்பேருந்து சேவையை துவக்கி வைக்கிறார். என்ன ரெடியா மக்களே!
Similar News
News January 28, 2026
திமுக – காங்கிரஸ் மக்கர் கூட்டணி: நயினார் நாகேந்திரன்

பாஜக டபுள் இன்ஜின் இல்லை, மக்கர் இன்ஜின் என கனிமொழி விமர்சித்திருந்த நிலையில் அதற்கு நயினார் நாகேந்திரன் பதிலடி கொடுத்துள்ளார். திமுக- காங்கிரஸ் கூட்டணிதான் இப்போது மக்கர் கூட்டணியாக உள்ளதாக அவர் விமர்சித்துள்ளார். மேலும், சட்டமன்ற தேர்தல் முடிந்த பின் யார் மக்கர் இன்ஜின், யார் டப்பா இன்ஜின், யார் வந்தே பாரத் இன்ஜின் என தெரிய வரும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
News January 28, 2026
இன்று பள்ளிகளுக்கு விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு!

தொடர் விடுமுறைக்கு பின் நேற்று மாணவர்கள் பள்ளிக்கு திரும்பினர். இந்நிலையில், இன்று 2 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மன்னார்குடியில் உள்ள ராஜகோபால சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி திருவாரூரிலும், திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு புதுக்கோட்டையிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
News January 28, 2026
பூவுக்குள் ஒளிந்திருக்கும் பூவாக ஆஷிகா

‘சர்தார் 2’ பட நடிகை ஆஷிகா ரங்கநாத் தனது லேட்டஸ்ட் போட்டோஸை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அதில், சிவப்பு நிற சேலையில், சிவப்பு ரோஜாவாக ரசிகர்கள் கவனத்தை கவர்ந்திழுக்கிறார். காதல் பேசும் மொழியின் நிறம் சிவப்பு என்பதாலோ என்னமோ காவி கண்களால் காதல் பேசுகிறார். பூவுக்குள் ஒளிந்திருக்கும் பூவாக இருக்கும் இவரது அழகான போட்டோஸ், உங்களுக்கும் பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.


