News January 8, 2026

திருவாரூர்: சலூன் கடைக்காரர் போக்சோவில் கைது

image

குடவாசல் அருகே சுரைக்காயூர் பகுதியைச் சேர்ந்தவர் விஜய் (25). இவர் அப்பகுதியில் சலூன் கடை நடத்தி வருகிறார். இந்த கடைக்கு 7 வயது சிறுவன் ஒருவன் முடி வெட்ட சென்றுள்ளான். அப்போது சலூன் கடைக்காரரான விஜய் அந்த சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுவன் தனது தாயாரிடம் கூறியதையடுத்து, போலீசாரிடம் புகார் கொடுத்ததன் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் விஜய்யை கைது செய்தனர்.

Similar News

News January 21, 2026

திருவாரூர்: ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை

image

திருவாரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பழையவலம் ஊராட்சியில் சுமார் 1,000 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காகவும், வீட்டு உபயோகத்துக்காகவும் பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த குடிநீர், கடந்த ஓராண்டாக உப்பு நீராக வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில், பழையவலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் குடங்களுடன் பெண்கள் முற்றுகையிட்டனர்.

News January 21, 2026

திருவாரூரில் சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல்

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, சத்துணவு ஊழியர்கள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தேர்தல் வாக்குறுதியின் படி சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்; குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும்; பணிக்கொடை அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சமும், சமையலர் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சமும் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

News January 21, 2026

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து அவர்களுக்கு தேவையான நலத்திட்ட உதவி குறித்த கோரிக்கை மனுக்களை பெற்று தீர்வு காணும் நோக்கில் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மன்னார்குடி வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் ஜன.23-ம் தேதி காலை 11 மணிக்கு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியரகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!