News January 8, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: கண்ணோட்டம் ▶குறள் எண்: 574
▶குறள்:
உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்
கண்ணோட்டம் இல்லாத கண்.
▶பொருள்: வரம்பிற்கு உட்பட்ட கண்ணோட்டம் இல்லாத கண், முகத்தில் இருப்பது போல் இருக்கிறதே தவிர, அதனால் வேறு என்ன பயன் உண்டு?
Similar News
News January 27, 2026
இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்

இந்தியாவிலேயே முதல் முறையாக, சிறுமிகளுக்கு கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை சென்னையில் CM ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் தமிழ்நாட்டில் 14 வயதுக்கு உட்பட்ட 3,38,649 பெண்களுக்கு, முன்கூட்டியே அரசின் சார்பில் இலவசமாக HPV தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. தனியார் ஹாஸ்பிடலில் இந்த ஊசியை இருமுறை செலுத்த ₹28,000 செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
News January 27, 2026
சென்னை ஏர்போர்ட்டில் தீ விபத்து: விமான சேவை பாதிப்பு

சென்னை ஏர்போர்ட்டின் 2-வது முனையத்தில் உள்ள கேண்டீன் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தால் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. அங்கு நிலவும், பதற்றம் காரணமாக விமானங்கள் இயக்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு பயணிகள் ஏர்போர்ட்டை விட்டு பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
News January 27, 2026
நாளை பள்ளிகளுக்கு விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

மன்னார்குடியில் உள்ள ராஜகோபாலசுவாமி கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, நாளை (ஜன.28) திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து கலெக்டர் மோகனச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். இதனால், அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள், மாநில அரசு அலுவலகங்கள் இயங்காது. அதேபோல், தான்தோன்றிமலை வெங்கடரமண சுவாமி கோயில் குடமுழுக்கையொட்டி, கரூர் வட்டத்திற்கு மட்டும் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


