News January 8, 2026
‘ஜனநாயகன்’ டிக்கெட் கட்டணம் வாபஸ்

<<18789317>>தணிக்கை சான்றிதழ் சிக்கலால்<<>>, ஜனநாயகன் 9-ம் தேதி வெளியாகாது என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் படம் பார்ப்பதற்காக முன்பதிவு செய்திருந்த ரசிகர்களுக்கு டிக்கெட் தொகையை திருப்பி அனுப்பக்கூடிய பணிகள் தொடங்கியுள்ளன. படத்தை கொண்டாடி தீர்க்கலாம் என காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. நீங்க டிக்கெட் புக் செஞ்சு இருந்தீங்களா?
Similar News
News January 29, 2026
ஒரே நாளில் வெள்ளி விலை கிலோ ₹25,000 உயர்ந்தது

தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலையும் வரலாறு காணாத உச்சம் தொட்டு நகைப் பிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 1 கிராம் வெள்ளி ₹25 உயர்ந்து ₹425-க்கும், 1 கிலோ வெள்ளி ₹25,000 உயர்ந்து ₹4.25 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தொடரும் விலை ஏற்றத்தால் வரும் நாள்களிலும் விலை அதிகரித்துக் கொண்டே செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News January 29, 2026
கமல் கட்சிக்கு புதிய சிக்கல்

கமலின் மநீம-வுக்கு ECI டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கியிருந்தது. இந்நிலையில், திமுக கூட்டணியில் கமல் கட்சிக்கு ஒற்றை இலக்கத்தில் தொகுதிகள் ஒதுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. குறைந்தது 12 தொகுதிகளில் போட்டியிட்டால் தான் பொதுச்சின்னம் ஒதுக்கப்படும் என்பதால், மநீம டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிட இயலாது. எனவே, மநீம வேட்பாளர்களை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைக்க திமுக திட்டமிட்டுள்ளதாம்.
News January 29, 2026
2028-ல் இது நடக்கும்: PM மோடி கொடுத்த Promise

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை 140 கோடி இந்தியர்களின் எண்ணங்களை பிரதிபலிப்பதாக PM மோடி கூறியுள்ளார். 2047-ல் வளர்ந்த பாரதம் என்ற இலக்கை இந்தியா நிச்சயம் எட்டும் என்ற அவர், உலக பொருளாதாரத்தில் 5-ம் இடத்தில் உள்ள இந்தியா, 2028-ல் 3-வது இடத்திற்கு முன்னேறும் எனவும் உறுதியளித்துள்ளார். மேலும், நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கு பதிலளிக்க மத்திய அரசு தயார் எனவும் தெரிவித்துள்ளார்.


