News January 8, 2026
கோவைக்கு சிறப்பு ரயில்

கோவையில் இருந்து வருகிற 11, 18-ந் தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11.30 மணிக்கு புறப்படும் கோவை – சென்னை சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06034) மறுநாள் காலை 9.50 மணிக்கு சென்னை செல்லும். மறுமார்க்கத்தில் சென்னை சென்ட்ரல் நிலையத்தில் இருந்து ஜனவரி 12, 19-ந் தேதிகளில் இரவு 11.25 மணிக்கு புறப்படும் சென்னை-கோவை விரைவு ரெயில் (எண்:06033) மறுநாள் காலை 9 மணிக்கு கோவை வந்தடையும்
Similar News
News February 8, 2026
கோவை: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377,
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500,
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090,
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098,
5. முதியோருக்கான அவசர உதவி : 1253,
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033,
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க.
News February 8, 2026
உக்கடத்தில் போலீஸ் தீவிர கண்காணிப்பு

கோவை, உக்கடம் வாலாங்குளத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காதல் ஜோடி ஒன்று அங்கிருந்த கழிப்பறையில் சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து கோவை மாநகர போலீசார் பகல் நேரங்களில் மட்டுமல்லாது இரவு நேரங்களிலும் தங்களது கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.
News February 8, 2026
கோவை: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

கோவை வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிஞ்சுக்கோங்க. ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234, 044-25268320) புகார் செய்யலாம். SHARE


