News January 7, 2026
வேலூர்: கலெக்டர் முக்கிய தகவல்!

பொது விநியோகத் திட்டத்தின் சேவைகள் அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் விதமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அளவில் வரும் ஜனவரி 10-ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ரேஷன் கார்டு சிறப்பு திருத்த முகம் நடைபெற உள்ளது. இதில் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் மேற்கொள்ளலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 13, 2026
வேலூர்: பொங்கலுக்கு சொந்த ஊருக்கு போறீங்களா?

வேலூர் மக்களே, பொங்கல் விடுமுறையின் போது சொந்த ஊருக்கு செல்ல பேருந்து கிடைப்பது என்பது குதிரைக்கொம்பாக உள்ளது. இதுபோன்ற சமயத்தில் ஆம்னி பேருந்துகள் அதிகளவு கட்டணத்தை உயர்த்தி மக்களிடம் கொள்ளையடிக்கின்றன. இதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. வேலூரில் உள்ளவர்களுக்கோ (அ) உங்களுக்கு தெரிந்தவர்களுக்கோ ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் 9840023011 எண்ணில் புகார் செய்யலாம். ஷேர்!
News January 13, 2026
வேலூரில் மணல் கொள்ளை; தட்டி தூக்கிய போலீஸ்

பேரணாம்பட்டு அடுத்த எம்.வி. குப்பம் பாலாற்றில் மணல் கடத்துவதாக மேல்பட்டி போலீசாருக்கு நேற்று (ஜன.12) ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது 5 மணல் மூட்டைகளை பைக்கில் கடத்திக்கொண்டு சாமரிஷி குப்பம் பகுதியை சேர்ந்த அரேஸ் (45) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 13, 2026
வேலூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன. அதன்படி இன்று (ஜன.12) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.


