News January 7, 2026
சத்துகளின் பெட்டகம் இந்த உணவு!

ஆரோக்கியமான வாழ்விற்கான சிறந்த சிறுதானிய உணவுகளில் ஒன்று கம்பு. அதிக சத்துகள் உள்ளதால் இதனை அடிக்கடி சாப்பிடுவது மிக நல்லது என்கின்றனர் டாக்டர்கள். *வளரும் குழந்தைகள், மாதவிடாய் தொடங்கிய பெண் குழந்தைகளுக்கு மாதம் 4 முறையாவது கொடுக்கவும் *சர்க்கரை நோயாளிகளுக்கு மிகச்சிறந்த உணவு *உடல் எடையை குறைக்க உதவுகிறது *புற்றுநோய் அபாயத்தை தடுக்க உதவுகிறது *மன அமைதியை தருகிறது *செரிமானத்தை எளிதாக்குகிறது.
Similar News
News February 5, 2026
கடத்தல் வழக்கில் நடிகர் மோகன் பாபு அதிரடி கைது

2 மாணவர்களை கடத்தி தாக்கிய வழக்கில் நடிகர் மோகன் பாபு கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் MB யுனிவர்சிட்டியின், மாணவர் சங்க தலைவர்கள் கல்வி கட்டண உயர்வை எதிர்த்து, கலெக்டரிடம் மாணவர்கள் பொதுநல மனு அளிக்க முயன்றுள்ளனர். அப்போது அவர்கள் கடத்தப்பட்டு, தாக்குதல்களுக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. இதில் மோகன்பாபு உள்பட 13 பேர் கைதாகியுள்ளனர். தமிழில் மோகன் பாபு ‘சூரரை போற்று’ படத்தில் நடித்திருந்தார்.
News February 5, 2026
TN இடைக்கால பட்ஜெட்டில் என்னென்ன இடம்பெறும்?

தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று பகல் 12 மணிக்கு CM ஸ்டாலின் தலைமையில் கூடுகிறது. இதில் பட்ஜெட்டில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட இருக்கிறது. பிப்ரவரி 2 அல்லது 3-வது வாரத்தில் TN அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நெருங்குவதால் இதில் என்னென்ன அறிவிப்புகள் இடம்பெறும் என மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
News February 5, 2026
இன்று அறிமுகமாகும் ‘பாரத் டாக்ஸி’

2 மாத சோதனைக்கு பிறகு, இன்று ‘பாரத் டாக்ஸி’ திட்டத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்கிறார். முதற்கட்டமாக, டெல்லி & குஜராத்தில் தொடங்கப்படும் இச்சேவை, விரைவில் சென்னை, மும்பை, ஹைதராபாத் போன்ற நகரங்களிலும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. சேவை கட்டணமின்றி, பயண கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் இந்த டாக்ஸியில், பிற தனியார் டாக்ஸிக்களை விட கட்டணம் 20% – 30% வரை குறைவாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.


