News January 7, 2026
முன்னாள் அமைச்சர் காலமானார்.. கண்ணீர் அஞ்சலி

தனது வாழ்க்கையை பொது சேவை & இந்தியாவின் விளையாட்டு மேம்பாட்டுக்காக அர்ப்பணித்தவர் சுரேஷ் கல்மாடி (81) என்று, இந்திய ஒலிம்பிக் சங்க Ex தலைவர் நரிந்தர் பத்ரா புகழஞ்சலி செலுத்தியுள்ளார். முன்னாள் மத்திய அமைச்சரும், காங்., மூத்த தலைவருமான சுரேஷ் நேற்று காலமானார். அவருக்கு அரசியல் தலைவர்கள், விளையாட்டு துறையினர், பொதுமக்கள் உள்பட பலரும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
Similar News
News February 6, 2026
’ஜன நாயகன்’ படத்துக்காக வெயிட்டிங்: தமிழிசை

‘ஜன நாயகன்’ படம் வராமல் இருப்பதற்கும் பாஜகவுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என தமிழிசை கூறியுள்ளார். 2 வருடம் படம் எடுத்துவிட்டு, 30 நாள்களுக்குள் அனுமதி கிடைக்கவேண்டும் என கேட்பதாக கூறிய அவர், கோர்ட்டுக்கு செல்லாமல் சென்சார் போர்டு சுட்டிக்காட்டிய தவறுகளை அவர்கள் நிவர்த்தி செய்திருக்கலாம் என்றார். மேலும், நாங்களும் ஜன நாயகன் எப்போது வரும், பார்க்கலாம் என்றுதான் காத்திருக்கிறோம் என பேசியுள்ளார்.
News February 6, 2026
திமுகவில் இணைந்தார்.. விஜயபாஸ்கர் அதிர்ச்சி

கரூர் மாவட்ட அதிமுக மருத்துவ அணிச் செயலாளர் Dr.தர்மேந்திரன், செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைத்து கொண்டார். இது, MR விஜயபாஸ்கர் தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வரும் தேர்தலில் கரூர் தொகுதியை கைப்பற்ற விஜயபாஸ்கரும், தக்க வைக்க செந்தில் பாலாஜியும் கடுமையாக உழைத்து வருகின்றனர். கடந்த சில நாள்களாக இரு தரப்பும் மாறி மாறி நிர்வாகிகளை தங்கள் வசம் இழுத்து வருவதால் களம் சூடுபிடித்துள்ளது.
News February 6, 2026
அமைச்சரவையில் எடுக்கப்பட்ட அதிரடி முடிவுகள்

TN அமைச்சரவை கூட்டத்தில் 15 முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் TRB ராஜா கூறியுள்ளார். ➤தமிழ்நாட்டுக்கு வரும் அடிடாஸ் நிறுவனம் ➤ஹுண்டாய் போன்ற ஏற்கனவே உள்ள நிறுவனங்கள் விரிவாக்கம் ➤வியட்நாமின் வின்பாஸ்ட் நிறுவனம் துவக்கம் ➤ராணிப்பேட்டையில் பிப்.9 டாடா JLR பற்றி முக்கியமான அறிவிப்பு வெளியாகும். இதனால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.


