News January 7, 2026

கடலூர்: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

image

கடலூர் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <>Tamil Nilam<<>> என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்பதை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE IT.!

Similar News

News January 13, 2026

கடலூர்: 9-ம் வகுப்பு மாணவன் தற்கொலை

image

விழுப்புரம் மாவட்டம், ஆனத்தூரை சேர்ந்த மணிகண்டன் மகன் சிவவிஷ்ணு (13), கடலூரில் உள்ள தனது தாத்தா வீட்டில் தங்கியிருந்து, தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நடந்து முடிந்த அரையாண்டு தேர்வில் அனைத்து பாடங்களிலும் பெயில் ஆனதால் மனமுடைந்த சிவவிஷ்ணு நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News January 13, 2026

கடலூர்: மனைவி கண் முன்னே கார் மோதி பலி

image

காட்டுமன்னார்கோவில் அடுத்த திருச்சின்னபுரத்தை சேர்ந்தவர் உதயச்சந்திரன் (48). ஓ.என்.ஜி.சி. நிறுவன தொழிலாளியான இவர் தனது மனைவி பழனியம்மாளுடன்(38) பைக்கில் வீராணம் ஏரிக்கரை வழியாக சென்றபோது எதிரே வந்த கார் மோதி படுகாயம் அடைந்த உதயசந்திரன் நேற்று உயிரிழந்தார். படுகாயமடைந்த பழனியம்மாள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இதுகுறித்து புத்தூர் போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.

News January 13, 2026

கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று(ஜன.12) இரவு 10 மணி முதல் இன்று(ஜன.13) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!