News January 7, 2026

பொங்கல் பரிசு ₹3,000.. வெளியானது புதிய அறிவிப்பு

image

சரியான குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ₹3,000 வழங்குவதையும், முறைகேடு நடக்காமல் இருப்பதை உறுதி செய்யவும் அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், பொங்கல் தொகுப்பு, ரொக்க தொகை வழங்குவதில் குளறுபடி இருந்தால், உடனே 1800 425 5901, 0424 -2252052 எண்களில் புகார் கூறலாம் என முதல் மாவட்டமாக ஈரோடு கலெக்டர் கந்தசாமி அறிவித்துள்ளார். இதேபோல், அனைத்து மாவட்ட கலெக்டர்களும் அறிவிக்கவுள்ளனர்.

Similar News

News January 22, 2026

குழப்பத்தை உண்டாக்க அதிமுக முயற்சி: எ.வ.வேலு

image

ஆளுநர் உரையின் மீதான விவாதத்தில் தங்களை பேச அனுமதிக்கவில்லை என கூறி <<18923157>>அதிமுகவினர் <<>> சட்டபேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில், சட்டப்பேரவையின் நடைமுறைகளை மாற்றி, அதிமுகவினர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்து வருவதாக எ.வ.வேலு குற்றம்சாட்டியுள்ளார். அதிமுக ஆட்சியிலும் ஆளுநர் உரையின் மீதான விவாதத்தின் போது கவன ஈர்ப்பு தீர்மானங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டதில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

News January 22, 2026

அஜித் குமார் மரணம்.. புதிய தகவல் வெளியானது

image

கோயில் காவலாளி அஜித் குமார், போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. இவ்வழக்கில் சிறையில் இருக்கும் காவலர்கள் தற்போது ஜாமின் கோரி மதுரை ஐகோர்ட்டை நாடியுள்ளனர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஜாமின் வழங்க ஐகோர்ட் மறுப்பு தெரிவித்தது. மேலும், நிகிதாவின் நகை திருட்டு வழக்கின் நிலை குறித்து சிபிஐ விசாரணை அதிகாரி விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

News January 22, 2026

இனி டாக்டர் ரோஹித் சர்மா!

image

மகாராஷ்டிராவின் அஜிங்கியா DY பாட்டீல் பல்கலை., ரோஹித் சர்மாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கவுள்ளது. கிரிக்கெட்டில் அவரின் ஈடு இணையற்ற பங்களிப்பு & முன்மாதிரியான தலைமைப் பண்பையும் கெளரவிக்கும் விதமாக இந்த பட்டம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் யூனிவர்சிட்டியின் பட்டமளிப்பு விழாவில், ஹிட்மேன் கெளரவிக்கப்படவுள்ளார்.

error: Content is protected !!