News January 7, 2026
பாஜகவுடன் கூட்டணி அமைக்கிறதா காங்கிரஸ்?

மகாராஷ்டிராவின் அம்பெர்நாத் நகராட்சி தேர்தலில், காங்.,+ பாஜக கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், இத்தகவலை அம்மாநில காங்., மூத்த தலைவர் சச்சின் சாவந்த் மறுத்துள்ளார். மாறாக, சிவசேனாவின் (ஷிண்டே) ஊழல் சாம்ராஜ்யத்தை ஒழிக்க, கட்சி அடையாளங்களுக்கு அப்பாற்பட்டு பல கட்சி நிர்வாகிகள் ஒன்றிணைந்து அம்பெர்நாத் மேம்பாட்டு முன்னணியை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 13, 2026
மிகவும் சோம்பேறியான விலங்குகள் PHOTOS

உலகில் உள்ள உயிரினங்களில் சில விலங்குகள் மிகவும் சோம்பேறிகளாக, அதாவது மெதுவாக செயல்படுபவையாக உள்ளன. இந்த விலங்குகளின் ஓய்வெடுக்கும் பழக்கம் மற்றும் மெதுவான செயல்பாடு, அவற்றின் ஆற்றலைச் சேமிக்கவும், உணவை ஜீரணிக்கவும், வேட்டையாடலில் இருந்து தப்பிக்கவும் உதவுகின்றன. எந்தெந்த விலங்குகள் மிகவும் சோம்பேறிகள் என்று மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதை SHARE பண்ணுங்க.
News January 13, 2026
விஜய் படம் ரீரிலீஸிலும் சிக்கல்

சென்சார் பிரச்னையால் ‘ஜன நாயகன்’ படம் தள்ளிப்போனதால் ‘தெறி’ படம் பொங்கல் நாளில் (ஜன.15) ரீ-ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் தியேட்டரை திருவிழாவாக்க ரசிகர்கள் தயாராகி வந்தனர். இந்நிலையில், ரிலீஸாகவுள்ள பட (ஜன நாயகன்) தயாரிப்பாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தெறி பட ரீ-ரிலீஸ் ஒத்தி வைக்கப்படுவதாக கலைப்புலி தாணு அறிவித்துள்ளார். இதனால், விஜய் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
News January 13, 2026
கூட்டணி: முடிவெடுக்க முடியாமல் தவிக்கும் டிடிவி

கடந்த வெள்ளிக்கிழமை டெல்லியில் அமித்ஷாவை டிடிவி சந்தித்த நிலையில், NDA கூட்டணியில் இணைந்தால் அமமுகவிற்கு 7 சீட்டுகள் ஒதுக்கப்படலாம் என்று பேச்சு எழுந்தது. இந்நிலையில், அதிமுக கூட்டணியில் இணைந்தாலும் உள்ளடி வேலை பார்த்து தங்களது வேட்பாளர்கள் தோற்கடிக்கப்படலாம் என TTV நினைக்கிறாராம். இந்த குழப்பத்தால், கடந்த 3 நாள்களாக எந்த ஒரு கட்சி நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் அவர் இருப்பதாக கூறப்படுகிறது.


