News January 7, 2026
தொழிலதிபரின் பேத்தியை மணக்கும் அர்ஜுன் டெண்டுல்கர்

சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுனுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. கடந்தாண்டு ஆகஸ்ட்டில் தொழிலதிபர் ரவி காயின் பேத்தி சானியா சந்தோக்கிற்கும், அர்ஜுன் டெண்டுல்கருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதை சச்சினும் உறுதிப்படுத்தியிருந்தார். இந்நிலையில், மார்ச் 5-ல் திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், ஏற்பாடுகள் நடந்துவருவதாகவும் சச்சினின் நண்பர்கள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
Similar News
News April 10, 2026
BREAKING மதுரை வந்தார்.. தவெக தலைவர் விஜய்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் தவெக வேட்பாளர்களை அறிமுகம் செய்து, பரப்புரை மேற்கொள்வதற்காக தவெக தலைவர் விஜய் தற்போது, மதுரை விமான நிலையம் வந்தடைந்துள்ளார். அவருக்கு தொண்டர்கள் பூங்கொத்து கொடுத்து உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். இங்கிருந்து சாலை மார்க்கமாக மேலூர் வழியாக காரைக்குடி செல்லும் விஜய் நண்பகல் 12 மணியளவில் பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார்.
News April 10, 2026
குழந்தைகளை பிரசாரத்தில் ஈடுபடுத்திய ஆதவ்

தேர்தல் விதிகளை மீறி ஆதவ் அர்ஜுனா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். வில்லிவாக்கம் தொகுதியில் நடந்த ஆதவ் பிரசாரத்தில் தவெக சின்னம் இருக்கும் சட்டை, கையில் விசில், கட்சி துண்டுகளுடன் குழந்தைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஒரு கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளரே விதிகளை மீறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. <<-se>>#TNElection2026<<>>
News April 10, 2026
Sports 360: இன்று களம்காண்கிறது RR vs RCB

➤KKR அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ வெற்றிக்கு வித்திட்ட 21 வயது இளம் வீரர் முகுல் சவுத்ரி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார் ➤IPL: RR மற்றும் RCB இன்று இரவு 7:30 மணிக்கு மோதுகின்றன ➤டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மெதுவாக பந்து வீசியதற்காக GT கேப்டன் சுப்மன் கில்லுக்கு ₹12 லட்சம் அபராதம் ➤ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி கால் இறுதிக்கு முன்னேறியுள்ளார்


