News January 7, 2026
CM ஸ்டாலின் கார் டயர் வெடிப்பு.. புதிய தகவல்

திண்டுக்கல்லில் இருந்து மதுரைக்கு சென்றபோது CM ஸ்டாலின் கார் டயர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் நல்வாய்ப்பாக யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், தற்போது கார் டயர் மாற்றப்பட்டு, அவர் திருமங்கலத்தில் இருந்து மதுரை ஏர்போர்ட்டுக்கு சென்றதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் அரசு தரப்பில் அதிகாரப்பூர்வ செய்தி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News January 29, 2026
தி.மலை: Spam Calls-க்கு இனி ‘எண்டு கார்டு’

தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card என Spam Calls வருவதால், நமக்கு டென்ஷன்தான் மிச்சம். சென்னை மக்களே, இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். ஆம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த பயனுள்ள தகவலை உடனே மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!
News January 29, 2026
₹1Cr கேட்டு விஜய்க்கு மானநஷ்ட நோட்டீஸ்

தவெகவில் இணைந்ததாகக் கூறி, தவறான தகவல் வெளியிடப்பட்டதாக தூத்துக்குடி மாவட்ட செயலாளர், விஜய் ஆகியோருக்கு பிரபல தொழிலதிபர் கண்ணன் மானநஷ்ட நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தனது மகன் மட்டுமே தவெகவில் சேர்ந்ததாக கூறியுள்ள அவர், தவறான செய்தி வெளியிட்டதால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதற்காக ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கோரியுள்ள அவர், கோர்ட்டில் மானநஷ்ட வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளார்.
News January 29, 2026
FLASH: 6 நாள்கள் விடுமுறை

பிப்ரவரிக்கான வங்கி விடுமுறை நாள்களை RBI வெளியிட்டுள்ளது. உள்ளூர் பண்டிகை காரணமாக சில மாநிலங்களில் 9 நாள்கள் வரை வங்கிகள் செயல்படாது. ஆனால், தமிழகத்தில் வழக்கமான 6 நாள்கள் மட்டும் வங்கிகள் இயங்காது. அதாவது, பிப்.1, 8, 15, 22 ஆகிய ஞாயிற்றுக் கிழமைகளில் செயல்படாது. இதேபோல், 2-வது, 4-வது சனிக்கிழமைகளில் (பிப்.14, 18) வங்கிகள் விடுமுறையாகும். இந்த தேதிகளில் நேரடி வங்கி சேவை இருக்காது. உஷார் மக்களே!


