News January 7, 2026
திருவாரூர்: மிக கனமழை எச்சரிக்கை!

வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் திருவாரூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் வரும் ஜன.10-ம் தேதி (சனிக்கிழமை) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஷேர் பண்ணுங்க!
Similar News
News February 11, 2026
திருவாரூர்: ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

பொது விநியோகத் திட்டத்திற்கு தனியார்த் துறை அமைக்கக் கோரி திருவாரூர் மாவட்டத்தில் ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தினர் கடைகளை மூடி மூன்று நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இதன் ஒரு பகுதியாக நேற்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ரேஷன் கடை ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் பணி பாதிக்கப்பட்டது.
News February 10, 2026
திருவாரூர்: பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

திருவாரூர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
1. திருவாரூர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04366-226767
2. தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
3. Toll Free: 1800 4252 441
4. சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
5. உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News February 10, 2026
திருவாரூர்: இனி வாட்ஸ்ஆப் மூலம் வரி செலுத்தலாம்!

தமிழக அரசு, மெட்டா நிறுவனத்துடன் இணைந்து Whatsapp மூலமாக பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பெறுதல், வரி மற்றும் மின் கட்டணம் செலுத்துதல் என 50-க்கும் மேற்பட்ட சேவைகள் பெரும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அத்தனை அரசு சேவைகளையும் அலைச்சல் இல்லாமல் நீங்கள் வீட்டில் இருந்தே பெறலாம்! ஷேர் பண்ணுங்க.!


