News January 7, 2026
அரியலூர் மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட்!

வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அரியலூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் வரும் ஜன.10-ம் தேதி (சனிக்கிழமை) அதிக மழைக்கான மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!
Similar News
News March 22, 2026
அரியலூர்: ஆலோசனை வழங்கிய பாஜக தலைவர்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் கிழக்கு ஒன்றியம் முத்து சேர்வா மடம் பகுதியில் நிர்வாகிகள் சந்தித்து, பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார் அரியலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் டாக்டர் பரமேஸ்வரி. வருகின்ற சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் விதமாகவும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டனர்.
News March 22, 2026
அரியலூர்: கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வருகை

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் கடத்த சில தினங்களுக்கு முன்னதாக இயற்கை எழுதிய, கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் எஸ்.என் துரைராஜ் அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் பங்கேற்க உள்ளார். பின்னர் தேர்தல் மற்றும் அரசியல் சம்பந்தமாக செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 22, 2026
அரியலூரில் வாக்குப்பதிவு பணியாளர்கள் தேர்வு

அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில், நேற்று (மார்ச்.21) மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான பொ.ரத்தினசாமி தலைமையில், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் தொகுதிகளுக்கான வாக்குச்சாவடி தலைமை அலுவலர், வாக்குப்பதிவு அலுவலர்கள் முதற்கட்ட தற்செயல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிகழ்வில் மாவட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


