News January 7, 2026
மயிலாடுதுறை: ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழப்பு

சீர்காழி ரயில் நிலையம் அருகில் பாதரக்குடி பகுதியில் இன்று காலை ரயிலில் அடிபட்ட நிலையில் 3 1/2 வயதுடைய பெண் புள்ளிமான் ஒன்று இறந்து கிடந்துள்ளது. ரயில் பாதையை சோதனையிட சென்ற ரயில்வே கீமேன்கள் அதைக் கண்டு ரயில் நிலைய அதிகாரிகள் மற்றும் மயிலாடுதுறை ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தனர். ரயில்வே போலீசார் மானின் உடலை கைப்பற்றி சீர்காழி வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
Similar News
News January 23, 2026
மயிலாடுதுறை: தேர்வு கிடையாது-போஸ்ட் ஆபீஸில் வேலை!

மயிலாடுதுறை மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் இங்கு <
News January 23, 2026
மயிலாடுதுறை: உதவித் தொகை – ஆட்சியர் அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில், வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் பதிந்துள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாத மாதம் உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதில், 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.300, +2 வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.400, பட்டதாரிகளுக்கு ரூ.600 வழங்கப்பயுள்ளது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News January 23, 2026
மயிலாடுதுறை: கம்மி விலையில் பைக், கார் வேண்டுமா?

மயிலாடுதுறை மக்களே, மத்திய அரசு E – வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் அறிவித்துள்ளது. பைக், கார், டிராக்டர் போன்றவற்றிற்கு ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை E-Voucher மூலம் மானியம் வழங்குகிறது. இதற்கு <


