News January 7, 2026

கடலூர்: தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

image

புதுப்பேட்டை அடுத்த அக்கடவல்லியை சேர்ந்தவர் விஸ்வநாதன் மகன் தொழிலாளி சிவசங்கர் (40). இவருக்கு, மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.

Similar News

News February 4, 2026

கடலூர்: கார் மோதி பாதயாத்திரை சென்ற பெண் பலி

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் ராமநாதபுரத்தை சேர்ந்தவர் சாமிதுரை என்பவரது மனைவி அசோதை (60). இவர் தனது ஊரைச் சேர்ந்தவர்களுடன் நேற்று மாலை சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பாத யாத்திரை சென்றார். மாலை 6 மணியளவில் வேப்பூர் அடுத்த சேப்பாக்கம் மேம்பாலம் அருகே சென்றபோது, பின்னால் வந்த கார் மோதியதில், படுகாயமடைந்த அசோதை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News February 4, 2026

கடலூர்: விபத்தில் சம்பவ இடத்திலேயே பலி

image

பண்ருட்டி திருக்காமு தெருவை சேர்ந்தவர் யுவராஜ் (34). ‘சவுண்டு சர்வீஸ்’ கடை நடத்தி வரும் இவர் தனது பைக்கில் அரசூர் சாலை வழியாக சென்றபோது எதிரே வந்த ஆட்டோ, யுவராஜ் ஓட்டிச்சென்ற பைக் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த யுவராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

News February 4, 2026

கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (பிப்.03) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.04) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம்,விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது

error: Content is protected !!