News January 7, 2026
மிகவும் கவலையாக உள்ளது: ஜெய்சங்கர்

<<18775826>>அதிபர் மதுரோ<<>> கைதுக்கு பின்னர், வெனிசுலாவில் நிலவி வரும் சூழல் கவலையை ஏற்படுத்துவதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அங்கு நடைபெறும் அரசியல் நிகழ்வுகளை கவனித்து வருவதாக கூறிய அவர், மக்களின் பாதுகாப்பே தற்போது முக்கியம் என்று குறிப்பிட்டுள்ளார். சம்பந்தப்பட்ட தரப்பினர் அமர்ந்து பேசி, வெனிசுலா மக்களின் நலனிற்காக சரியான முடிவை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News February 15, 2026
கலப்பட இலவங்கப்பட்டையை கண்டுபிடிப்பது ஈஸி!

ஞாயிற்றுக்கிழமையில் பலரும் பிரியாணி, சிக்கன் குழம்பு என சமைப்பதுண்டு. ஆனால் அதில் பயன்படுத்தப்படும் இலவங்கபட்டையில் கூட கலப்படம் வந்துவிட்டது என்பதை பலபேர் அறிவதில்லை. எனினும் அதனை கண்டுபிடிப்பது எளிது. ஒரிஜினல் இலவங்கப்பட்டை மெலிதாக, நிறைய அடுக்குகளுடன் ஒரு தனித்துவமான வாசனையும் வரும். ஆனால் கலப்பட பட்டை தடிமனாக, ஒரே ஒரு சுருளாக மட்டும் தான் இருக்கும். டெஸ்ட் பண்ணி பார்த்துவிட்டு சொல்லுங்க!
News February 15, 2026
திமுகவில் இணைந்தார்.. ஓபிஎஸ்-க்கு அடுத்த அதிர்ச்சி

OPS அணியின் தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர் கருப்பூர் சீனி திமுகவில் இணைந்தார். அவருடன் ஒன்றிய செயலாளர், நகர செயலாளர் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் விளாத்திகுளம் MLA மார்க்கண்டேயன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இது OPS-க்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஏற்கெனவே OPS அணியிலிருந்து EX அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் திமுக, அதிமுக, தவெகவில் அடுத்தடுத்து இணைந்து வருகின்றனர்.
News February 15, 2026
விஜய்க்கு நயினார் கூறியது நல்ல அட்வைஸ்: பாஜக

விஜய்யின் அரசியல் முதிர்ச்சியின்மையை சுட்டிக்காட்டி ஒரு சகோதரனாக நயினார் சில ஆலோசனைகளை வழங்கினார் என பாஜக செய்தி தொடர்பாளர் ANS பிரசாத் கூறியுள்ளார். விஜய் குடும்ப போட்டோக்களை வெளியிடாமல், நடிகையுடன் இருக்கும் போட்டோஸ் வெளியாவதை தவிர்க்க வேண்டும் என்ற அவர், இது எவ்வித உள்நோக்கமும் இன்றி, நல்லெண்ணத்தில் சொன்ன கருத்து என்றார். மேலும், இதை திமுகவும், தவெகவும் திசைதிருப்புவதாக பேசியுள்ளார்.


