News January 7, 2026
கஞ்சா வைத்திருந்த நபர் மீது பாய்ந்த குண்டாஸ்

சோமரசம்பேட்டை புங்கனூர் பகுதியில் கர்நாடக மாநிலத்திலிருந்து கஞ்சாவை வாங்கி வந்து அதில் 2.100 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த கள்ளிகுடியை சேர்ந்த சந்தோஷ் என்பவரை கடந்த 01.12.25ம்தேதி திருவெறும்பூர் போலீசார் கைது செய்தனர்.இவரின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் விதமாக,இவர் மீது குண்டர் தடுப்பு ஆணையினை இன்று திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் பிறப்பித்துள்ளார்.
Similar News
News January 10, 2026
திருச்சி: வெளிநாடு செல்ல ஆசையா?

திருச்சி மாவட்ட மக்கள் வெளிநாட்டில் வேலைவாய்ப்புகளை பெற அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்ட்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. வேலை வாங்கி தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபடும் போலி ஏஜெண்ட்களால் ஏமாறாமல் இருக்க, அரசு அங்கீகரித்த ஏஜெண்ட்களை தொடர்பு கொண்டு, பாதுகாப்பான முறையில் வெளிநாடு வேலைவாய்ப்புகளைப் பெறவும். உங்கள் பகுதி ஏஜென்ட்கள் விவரங்களை பெற <
News January 10, 2026
திருச்சி: 3 நாட்களுக்கு ரயில் ரத்து!

பொறியியல் பணிகள் காரணமாக, திருச்சி – காரைக்கால் டெமு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி – காரைக்கால் டெமு ரயிலானது வரும் 11, 14, 20 ஆகிய தேதிகளில், திருவாரூர் – காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திருச்சியில் இருந்து திருவாரூர் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 10, 2026
திருச்சி: பொருளாதார குற்றப்பிரிவு முக்கிய அறிவிப்பு

திருச்சி துறையூரை சேர்ந்த அப்பாதுரை என்பவர் “ஸ்ரீ மாரியம்மன் சிட்ஃபண்ட்ஸ்” என்ற பெயரில் தீபாவளி சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக, அவர் மீது பொருளாதார குற்றப்பிரிவு மூலம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. எனவே மேற்கண்ட சிட்பண்ட்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டவர்கள், திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


